பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செவிலியின் வேதனே 25

கீழ்ப் போய் ஒளித்துக் கொள்ளுமே! எங்கே பார்த்தாலும் தரையெல்லாம் நெருப்புப் போலக் கொதிக்கும். கடப் பதற்கரிய வெம்மையையுடைய கொடுங் கானம் அது. மேலே வெயில், கீழே வெப்பம். இத்தகைய பாலையில் அவள் போகவேண்டியிருக்குமே!

விடுசுடர் நடுவுநின்று அடுதலின், நிழலும்

அடியகத்து ஒளிக்கும் ஆரமுற்கானத்து.

(வீசுகின்ற சூரியனது கதிர் வானத்தின் நடுவாகிய உச்சியில் கின்று வருத்துவதகுல் கிழலும் அவரவர்கள் அடியில் ஒளிக்கும் நடப்பதற்கரிய் வெப்பத்தையுடைய பாலையில். -

விடு-வீசும். சுடர்-கதிர். கதிரை வீசும் சூரியன் என்றும் சொல்லலாம். நடுவு-நடுஇடம். அடுதலின் வருத்துவதனுலே. அடி-கடிப்பவர்களின் அடி. ஆர் அழல்-நடப்பதற்கரிய வெம்மை; அழல்-நெருப்புப் போன்ற வெம்மை. கானம்-பாலே நிலம்.)

மேலே வெயிலும் கீழே பொடியும் சுடும் பாலையில் போவார்களுக்கு யாரேனும் துணைபுரிவார் உண்டா? இங்கு புரியாமல் இருந்தாலே போதும். அவ்விடத்தில் வழிப் போவாரை அடித்துப் பறிக்கும் ஆறலே கள்வர்கள் வாழ்கிருர்கள். கொலைக்கு அஞ்சாத வேட்டுவர் இருக் கிருர்கள். அவர்களுடைய வேலை கொலை செய்யும் கொடுந் தொழில்தான். இந்த வெவ்வினை வேடர் உடுக்கையைத் தட்டி முழக்குவார்கள். அதை வழிப் போக்கர் கேட்டால், "ஐயோ, கம்மை வருத்த வேடர் வரு வார்போல் இருக்கிறதே!" என்று நடுங்குவார்கள். இந்த நடுக்கத்தைத் தரும் அழகான இட்ம் பாலே !

வெவ்வினை வேடர் துடிக்குரல் வெளிஇ

மெய்விதிர் எறியும் செவ்வித்து ஆகி.

(வெய்ய தொழிலையுடைய வேடர்களுடைய உடுக்கையின் ஒலிக்குப் பயந்து வழிப்போவார் உடம்பு நடுங்குகின்ற இயல்பை உடையதாகி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/35&oldid=548455" இலிருந்து மீள்விக்கப்பட்டது