பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செவிலியின் ே வதன் 27.

யிராமல் இடையில் நெடு வெளி கிடக்க சிற்பதைக் குறித்தது. இடை இடம். மருங்கில் - அருகில்.)

இத்தகைய இடத்தில் மறவர்கள் வாழ்கிருர்கள்; தங்கள் மனைவி மக்களுடன் வாழ்கிருர்கள். அவர்கள் வாழும் வீடுகள் எப்படி இருக்கின்றன ? பாலை நிலத்தில் மாளிகையையா கட்ட முடியும் ? வீட்டுத் துரண்களில் வேட்டை காய்களைக் கட்டியிருப்பார்கள். அவை குரைத் தால் கதிகலங்கிப் போகும். அவிழ்த்து விட்டாலோ அவற்றின் வேகத்தைக் கணக்கிட முடியாது. கோபமும் அத்தகையதுதான். நீண்ட் கயிற்றில் நாயைக் கட்டியிருப் பார்கள். காய்கள் சுற்றிச் சுற்றி வந்து இழுப்பதால் கயிறு துானே அறுக்கும். அதனால் தூண் தேய்ந்திருக்கும். மறவர் வீட்டுத் துரண் இது. இத்தகைய தூண்களுக்கு. மேலே கூரை வேய்ந்த குடிசை அது. - -

கூரையை வேயத் தென்னங்கீற்று இருக்கிறதா? வரகு, இருக்கிறதா? புல்கூடக் கரிந்து போகும். அந்தப் பாலையில் வீட்டுக்கு மேலே போட என்ன இருக்கிறது? ஆலுைம் அவர்கள் தங்கள் வீடுகளே வேய்ந்திருக்கிருர்கள். வேறு எவ்விடத்திலும் இத்தகைய கூரையைப் பார்க்க முடியாது. அந்தக் கூரையே அதில் வாழ்வாருடைய கொடுமையைப் புலப்படுத்தும். -

மரை என்ற பெயருள்ள மிருகம் பால கிலத்தில் உலவும். காட்டிலிருந்து தவறிப் போய் இங்கே வந்து விடும். மானப்போல இருந்தாலும் அதைவிடச் சற்று முரடாக இருக்கும். அதைக் க்ொன்று தின்று காலம் கழிப்பவர் மறவர். அதன் தோலைத் தங்கள் திருமாளி கைக்கு மேலே கூரையாக அமைத்துக் கொள்வார்கள். மயிரையும் சிவாமல் அப்படியப்படியே போட்டு விடுவார் கள். அவர்கள் குடிசைக்கு மேலே மயிர் சிவாத தோல் கிடக்கும். - - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/37&oldid=548458" இலிருந்து மீள்விக்கப்பட்டது