பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 ஒன்றே ஒன்று

15. கூற்று எனப் பெயரிய கொடுந்தொழில் ஒருவன்

ஆற்றல் செற்ற அண்ணல் ஆகுர்ச் செய்வளர் கமலச் சீறடிக் கொவ்வைச் செவ்வாய்க் குயில்மொழிக் கொடியே! (மடந்தை, கொடி, கானத்து மருங்கில் குரம்பையில் மறத்தி

யர் விருந்து ஆயினள்கொல் என்று கூட்டுக. மகிழாள் ஆகி,

ஆக, ஆயினள் கொல் என்று வினைமுடிவு செய்க.)

இது அகனேந்திணையில் பாலைத்திணையில் வந்தசெய்யுள். சார்த்துவகையால் பாட்டுடைத் தலைவனகிய ஆரூர் அண்ணலின் சிறப்பை இணைத்திருக்கிருர் ஆசிரியர். உடன் போக்கின்பின் செவிலி தலைவியை நினைந்து இரங்கியது என்பது இதன் துறை. - -

ஆரழற்கானம் என்று பாலே நிலமும், விடுசுடர் நடுவு கின்றடுதலின் என்பதால் பாலைக்குரிய பெரும் பொழு தாகிய வேனிலும் சிறுபொழுதாகிய கண்டகலும் வந்தன. இவை முதற்பொருள். ஈந்து, இலவம், வெள்ளில் என் னும் மரங்களும், கதகாய், மரை ஆகிய விலங்குகளும், துடியாகிய பறையும், வேடர் மறத்தியர் என்ற மக்களும் பாலைநிலத்துக்குரிய கருப்பொருள்கள். பிரிவாகிய உரிப் பொருள் அமைந்த பாட்டு இது. .

இது சேரமான் பெருமாள் நாயனர் பாடிய திருவாரூர் மும்மணிக் கோவையில் உள்ள 13-ஆவது பாடல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/42&oldid=548463" இலிருந்து மீள்விக்கப்பட்டது