பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குளிர்ந்த இடம்

பெரிய சோம்பேறி அவன்; எப்படியோ வந்து அக் தக் குடும்பத்தில் ஒட்டிக்கொண்டான். அவன் எப்படி வந்தான், ஏன் ஏற்றுக்கொண்டார்கள் என்பவற்றைச் சொல்லக்கூட முடியாது. அவனுடைய அதிருஷ்டமோ, இவர்களுடைய துரதிருஷ்டமோ அவனுக்கு இங்கே புக லிடம் கிடைத்தது. அவனைச் சோம்பேறி யென்று முதலில் கினேக்கத் தோன்றியது. ஆனல் வரவர அவன் பொல்லாத வன் என்று தெரிந்தது. அவனல் லாபம் ஒன்றும் இல்லா விட்டாலும் ஒவ்வொரு நாளும் புதியபுதிய தொல்லே விளைக் தது. போதாக் குறைக்கு வேறு சில தோழர்களையும் அவன் அழைத்துக் கொண்டு வந்துவிட்டான். எல்லோரும் மிக்க உரிமை யுடையவர்கள் போல இந்தக் குடும்பத்தின் வரு வாயில் பங்கு கொண்டு வாழத் தலைப்பட்டனர்.

குடும்பத் தலைவன் அப்பாவி "இதுவும் நம்முடைய தலே யெழுத்து” என்று எண்ணி அந்த அயோக்கியக் கூட் டத்தார் கொடுத்து வரும் அல்லல்களைச் சகித்துக்கொண்டு வந்தான். வரவர அவர்களால் விளையும் துன்பம் கணக்குக்கு மிஞ்சி விட்டது. உடன் பிறந்தவர்களைப் போல உரிமை பாராட்டும் அந்தக் கயவர்களே விட்டு நீங்கினல் நல்லது என்ற உணர்வு மெல்லக் குடும்பத் தலைவனுக்கு உண்டா யிற்று. அப்படிச் செய்ய எளிதில் மனம் வரவில்லை. அவர் களுடன் நெடு நாள் பழகிய பழக்கத்துக்கு அவன் அடிமை யாகிவிட்டான். இவர்களுடைய தொல்லேயினின்றும் எப். போது விடுபடுவோம்!” என்று பல சமயங்களில் ஏங்கின லும், "நம்மை விட்டால் இவர்களுக்குப் போக்கு எங்கே?" என்ற இரக்கமும் சில சமயம் உண்டாகும்.

3 .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/43&oldid=548464" இலிருந்து மீள்விக்கப்பட்டது