பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தளிர்ந்த இடம் 35

கொண்ட கிலே நான்காவது. இப்போது அவனுடைய உள் ளத்தில் ஒர் எண்ணம் தோன்றியது. "நாம் துன்பம் இல் லாத இட்ம் ஒன்றைப்பார்த்துக் கொண்டோம். இதுவரை யில் நம்முடன் வாழ்ந்தவர்களுக்கும் ஏதாவது இடம் கிடைத்தால் கல்ல்து" என்ற கருணே தான் அது 'கம்மால் இடம் பார்த்துக் கொடுக்க முடியாது. அவர்களாகப் பார்த்துக் கொள்ளட்டும். வேறு இடத்திலும் இவர்களால் துன்பங்தானே உண்டாகும் காம் ஓர் இடத்தைக் காட்ட இவர்கள் அங்கே போனல், அங்குள்ளவர்கள் படும். துன் பத்துக்கு நாமே ஒரு வகையில் காரணமாகிவிடுவோம். அந்தப் பாவத்தை நாம் என் கட்டிக் கொள்ளவேண்டும்?' என்றெல்லாம் அவனுடைய எண்ணங்கள் விரிந்தன. "எப்படிப் போனல் என்ன? நாம் நமக்குப் பாதுகாப்பான இடம் ஒன்றைப் பார்த்துக் கொண்டோம். இனி அவர்கள் தங்களுக்கு ஏற்ற இடத்தைப் பார்த்துக் கொள்ளட்டும்" என்று முடிவு செய்துகொண்டான்.

கடைசியாக அவர்களேப் பார்த்து இரக்கத்தினல் ஒரு வார்த்தை சொன்னன். நீங்கள் உங்களுக்கு ஏற்ற இடத்தை நாடிக்கொண்டு புறப்படுங்கள். நான் வேறு ஊருக்குப் போகிறேன். இனி எனக்கும் உங்களுக்கும் தொடர்பில்லே' என்று தைரியமாகச் சொன்னன்.

நமக்கு இவ்வுலக வாழ்வில் எத்தனையோ வகையான துன்பங்கள் உண்டாகின்றன. அவற்றை மூன்று வகை யாகத் தொகுத்துச் சொல்வார்கள். தாபத்திரயம் அல்லது மூவகைத் துன்பங்கள் என்று வழங்குவார்கள். உயிர் களால் வருவன, தெய்வத்தால் வருவன், பிற பொருள் களால் வருவன என்பன அவை. அவற்றை ஆக்யாத்மிகம், ஆதிதைவிகம், ஆதி பெளதிகம் என்று பெயரிட்டுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/45&oldid=548466" இலிருந்து மீள்விக்கப்பட்டது