பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தளிர்ந்த இடம் 37

உமக்குஓர் இடம்நாடிக் கொண்டு நடவிரோ, காலத்தால்.

(உமக்கு ஏற்ற ஒர் இடத்தைத் தேடிக்கொண்டு சரியான காலத்தில் புறப்பட்டு விடுங்கள். காலத்தால் நடவீர் என்க. நட வீரோ: ஓ, அசை நிலை. நடக்க மாட்டீர்களா என்று வினவாக வும் கொள்ளலாம்.)

“சீக்கிரமே புறப்பட்டுவிடுங்கள். இல்லாவிட்டால் கெட்டித் தள்ளிவிடுவேன்' என்று கூறுவதுபோல் தொனிக்கிறது, "கடவீரோ காலத்தால்" என்ற தொடர். இறைவனே காடிப் பற்றிக் கொண்டதல்ை அவருக்கு அத்தனை உறுதி பிறந்துவிட்டது. அது காறும் தம்மை அடிமை கொண்ட இடர்களைப் பார்த்து, நாயை ஒட்டுவ்து போல ஒட்டுகிரு.ர்.

'நீங்கள் எங்களை விட்டு எப்படி வாழ்வீர்கள்? எங்கே போகப் போகிறீர்கள்?’ என்று துன்பங்கள் கேட்காவிட் டாலும் கேட்டதாகப் பாவித்துச் சொல்கிருர்,

"அதைப் பற்றி உங்களுக்குக் கவலை வேண்டாம். உ ங் க ள | ல் நான்பட்ட துன்பம் போதும். என்னே வதக்கி யெடுத்து வி ட் டீ ர் க ேள! வெப்பு நோய் உடம்புக்குத்தான் வரும் என்ப ார் கள். உங்களால் நான் அடைந்த வெப்பம் உடம்பைப் பற்றியது ; உள்ளத்தைப் பற்றியது; உயிரையும் பற்றிவிட்டது. இங் தத் தாபம் நீங்க வேண்டுமே என்று ஏங்கினேன். நான் போகும் இடம் தாபம் நீங்குவதற்கு ஏற்ற இடம். கடலிலே உள்ள நீர் எவ்வளவு மிகுதியாக இருந்தாலும் பயன்படுவ தில்லை. அங்கே உண்டாகிறது மேகம். அந்த மேகம் மெல்ல மெல்ல எழுந்து வானே அளந்து சென்று, எங்கே தங்கலாம் என்று நாடி வருகிறது. கான் செல்லும் இட மாகிய காளத்தி மலையில் அது வந்து தங்குகிறது. அங்கே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/47&oldid=548468" இலிருந்து மீள்விக்கப்பட்டது