பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

←Ꮊ ஒன்றே ஒன்று

தது. அது தண்மையான இயல்பு. அன்பர்கள் திரளா கக் கூடும் இடத்தில் தண்மைச் சூழ்கிலே உண்டாகும்.

காளத்தி இறைவன் எழுந்தருளியிருக்கும் இடம்; அவனுடைய அருளே காடி அன்பர்கள் திரளாக வந்து கூடும் இடம்; உயிர்கள் யாவும் வாழ வேண்டும் என்ற தண்ணிய எண்ணம் எல்லோருக்கும் எழும் இடம் இயற் கையாகவே மலே உள்ள இடம் அது. அதோடு அன்பர் களின் கூட்டத்தால் விளையும் தண்மையும் சேர்கிறது. அத்தகைய இடத்தில் மேகங்கள் வந்து தங்கி மழை பொழி வதில் தடை என்ன? அந்த மழை கிலத்தின் வெப்பத்தை மாற்றிக் குளிர்விக்கிறது. அங்கே நிலவும் அன்புத் தண்மை இறைவனகிய மேகத்தினின்றும் அருள் மழை பொழியும் படி செய்கிறது. துன்பமாகிய வெம்மையிலே வதங்கியவர் களுக்குத் தாபத்திரயங்களினின்றும் விடுதலே பெற்றுச் சாக்தி பெற இதைக் காட்டிலும் சிறந்த இடம் இல்லை யென்றே நக்கீரருக்குத் தோன்றியது.

நக்கீரர் இறைவனுடைய நெற்றிக் கண்ணுல் வெதுப் புண்டு தொழு நோய் பெற்று வாடினர். அவர் இறைவன் ஆணேப்படி திருக்காளத்திக்கு வந்து அந்த நோய் ங்ேகப் பெற்ருர் என்பது புராணக் கதை. அவர் வெப்பு நீங்கிய இடம் இது என்பது அந்தக் கதையில் குறிப்பிக்கப் பெறு கிறது.

. இட்ரீர்! உமக்குஓர் இடம் நாடிக் கொண்டு

நடவிரோ, காலத்தால், நாங்கள்-கடல்வாய்க்

கருப்பட்டுஓங்கு ஒண்முகில்சேர் காள்த்தி 爱舰“岔*

ஒருப்பட்டோம் கண்டிர், உணர்ந்து.

இது கயில்பாதி காளத்தியாதி அந்தாதி என்ற நூலில்

உள்ள 44-ஆம் பாடல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/50&oldid=548471" இலிருந்து மீள்விக்கப்பட்டது