பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யழனது எச்சரிக்கை 43.

லாமா? ஆலுைம் எல்லோரும் ஒரே சிறையில்தான் இருக் கிரு.ர்கள்.

அந்தச் சிறையில் எல்லோரும் எப்போதுமே இருப்ப தில்லை. அதிலிருந்து பழைய குற்றவாளிகள் வெளியே செல்வார்கள்; புதியவர்கள் வருவார்கள். வெளியே செல் பவர்கள் யாவரும் ஒரே வகையினர் அல்ல. ஒருவர் உள் ளிருந்து வெளியே வருகிரு.ர். அவரை அழைத்துச் செல்ல மாலையுடன் சில நண்பர்கள் காத்துக் கொண்டிருக்கிரு.ர்கள். அவருக்கு அன்று விடுதலே. அதுவரையில் அநுபவித்த சிறை வாழ்க்கை இனி அவருக்கு இல்லை. அன்றே மற். ருெருவனும் அந்தச் சிறையிலிருந்து வெளி வருகிருன். ஆனல் அவனேப் போலீஸ் சேவகர்கள் பாதுகாக்கிருர்கள். அவர்களே சிறையினின்றும் அவனே அழைத்துச்செல்கிருர் கள். எங்கே? அவனே வேறு ஒரு சிறைக்குக் கொண்டு போய் அங்குள்ள காவலரிடம் ஒப்பித்துவிடுகிருர்கள். சிறையிலிருந்து புறத்தே வந்த இருவரில் ஒருவர் விடுதலை பெற்று அன்பர்களுடைய துணையோடு நேரே விடு செல் கிருர். மற்றவனே ஒரு சிறையிலிருந்து மற்ருெரு சிறைக் குப் போலீஸ் காவலோடு போகிருன். அந்தச் சிறையி' னின்றும் நீங்கிச் செல்வதில் இரண்டு பேரும் ஒத்தவர்களா லுைம், ச்ென்று சேரும் இடம், அழைத்துச் செல்வோர் ஆகிய திறத்தில் மாறுபாடு இருக்கிறது. -

உலகில் வாழும் உயிர்கள் உடலென்னும் சிறையில் துன்பத்தை அநுபவிக்கின்றன. புண்ணியம் பாவம் என் னும் இரண்டு காரணங்களால் இந்தச் சிறைவாசம் நேர்கிறது. - . . . -

'ஏழையின் இரட்டைவினையாயதோர் உடற்சிறை" என்பார் அருணகிரிநாதர்.

இந்தச் சி ைறயிலே வாழ்ந்த காலத்தில் நல்ல நடத்தையுடையவகை இருந்தால், இனி உடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/53&oldid=548474" இலிருந்து மீள்விக்கப்பட்டது