பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரை சேர்ந்த கலம்

" சாகிற காலத்தில் சங்கரா, சங்கரா என்று சொல் வதுபோல' என்பது ஒரு பழமொழி. இறைவனுடைய திருநாமத்தைச் சொல்வதும், அவனைப் பக்தி பண்ணுவதும் சில காட் பழக்கத்தாலே வந்துவிடுவன அல்ல; பல காலம் பழகிப் பழகி வரவேண்டியவை. 'இறக்கும் தருணத் தில் இறைவனை நினைந்தால் அவன் அருள் கிடைக் கும்; பிறவித் துயர் ங்ேகும்" என்று நூல்கள் கூறுகின்றன. 'இப்போதே என்ன அவசரம்? வயசாகிறபோது பார்த்துக் கொள்ளலாமே!" என்று இருந்துவிட்டால், முதுமையில் புதிதாக ஒரு பழக்கம் வராது. சாகிற காலத்தில் சங்கரா, சங்கரா என்று சொல்ல வரவேண்டுமானல், வாழ்கிற போதே அப்படிச் சொல்லிப் பழகியிருக்க வேண்டும். பழமொழி இந்தக் கருத்தைத் தெரிவிக்க எழுந்தது.

பலகாலம் உத்தியோகம் செய்து வாழ்ந்தவர்கள் ஓய்வு பெறுகிருர்கள். ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்குப் பழைய வாசனை மாறுவதில்லை. திடீரென்று தம்மையும் அறியாமல், ஏ. பியூன்” என்று அழைக்கிருர்கள். உத்தி யோகசாலைக்குப் போவதும், அங்கே வேலை பார்ப்பதும், மாலையில் வீட்டுக்கு வந்து கூட்டுக்குள் அடைவது போல அடைவதுமே அவர்களுக்கு வழக்கமாகிவிட்டன. ஒய்வு பெற்ற பிறகு புதிய வேலே ஒன்றும் செய்ய வருவதில்லை. ஆகவே ஒய்வு என்பது சிறை வாழ்க்கையைப்போல ஆகி விடுகிறது. மனம் தொய்ந்து உடம்பு துருப்பிடித்து விரை வில் இறந்து போகிருர்கள். உத்தியோக வாழ்வில் சுறு சுறுப்பும் பலமும் உடையவர்களாக இருந்தவர்கள் ஒய்வு பெற்ற பிறகு வலிமையிழந்து விரைவில் இறந்து போவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/62&oldid=548483" இலிருந்து மீள்விக்கப்பட்டது