பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரை சேர்ந்த காலம் 53

ஆச்சரியமாகத் தோன்றுகிறது. உத்தியோகத்தையன்றி அவர்களுக்கு வேறு ஒன்றும் தெரியாது. செய்வதற்கு ஒன் றும் இல்லாமையால் அவர்கள் வாழ்க்கை சூனியம் போலத் தோன்றுகிறது. புதிய முயற்சியும் புதிய சூழ்நிலையும் அவர் களுக்குக் கிடைப்பதில்லை. அதற்கு நெடுநாட் பழக்கம் வேண்டும் அல்லவா ? அதல்ை அவர்கள் மன்ம் குமைந்து வலிமையிழந்து போகிருர்கள்.

அப்படியின்றி உத்தியோக வாழ்வில் தமக்கு விருப்ப மான ஒரு துறையில் பொழுது போக்கும் பழக்கத்தைச் செய்து கொண்டவர்கள் உத்தியோகத்தினின்றும் விடுதலே பெற்ற பிறகு, அந்தப் பொழுது போக்கு வேலையிலே ஈடு பட்டு மகிழ்கிருர்கள். அத்தகைய பொழுது போக்குச் செயல்களை "ஹாபி (Hobby) என்று ஆங்கிலத்தில் சொல் கிருர்கள். அப்படிச் செய்கிறவர்கள் ஒய்வு பெற்ற பிறகும் சுறுசுறுப்பாகவும் உடல் நலன் குறையாதவர்களாகவும் விளங்குகிருர்கள். அவர்கள் செய்யும் காரியம் புதியதாகச் செய்வது அன்று; முன்பிருந்தே பழகி வந்தது.

வாழ்க்கையை வரையறை செய்துகொண்டு, உள்ளத் தைக் கண்டபடி சிதறவிடாமல் நம்முடைய அறிவுக்கும் ஆற்றலுக்கும் ஏற்ற வகையில் கடமைகளே வகுத்துக் கொள்ளவேண்டும். வாழ்வதற்கு வேண்டியது பொருள். அதை ஈட்ட உத்தியோகம் வேண்டும்.உத்தியோகத்தில் ஈடு படும்போதே ஓய்வு பெறுங் காலத்தில் பிறர் கையை எதிர் பாராதபடி எய்ப்பில் வைப்பாகப் பொருளைச் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்தப் பொருளாதார உண்மையை யாவரும் உணர்ந்திருக்கிருர்கள். பலர் செயலிலும் கொண்டு வருகிருர்கள். -

உத்தியோக வாழ்க்கைக்குப் பின் ஒய்வு பெறும் காலத்தை இப்போதே கினேந்து பொழுதுபோக்கான பழக் கத்தையும் பொருளையும் சேமிப்பது அறிவும் கியாயமுமான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/63&oldid=548484" இலிருந்து மீள்விக்கப்பட்டது