பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரை சேர்ந்த கலம் 55

பதும் துன்பம் என்பதும் ஒன்றைேடு ஒன்று தொடர்புடை யன. அவ்விரண்டும் இல்லாத சாந்த கிலே ஒன்று உண்டு. அலேயடங்கின. கடலேப் போன்ற அமைதி கிலே அது. அங்கே துன்பம் சிறிதும் இல்லாமையால் அதை இன்ப மென்று சொல்கிருேம். நாம் அநுபவத்தில் அடையும் இன்பம் அன்று அது. உலகியலோடு சாராத, இன்ப துன்ப எல்லே நீங்கின, உபசாந்த கில் அது.

அந்த கிலேயே இறைவனுடைய அருளால் விளைவது. அவனுடைய அருள் என்ற சக்தி நம்மை அந்த கிலேயில் சேர்க்கும். அறியாமை நீங்கி அச்சம் அற்று எல்லாவுயிர் களுக்கும் இனியனுக அன்பு செய்து வாழ்பவர்களுக்கு அந்த நிலையை அடைய வழி திறக்கும்.

அன்பு வாழ்க்கை வாழ்வது எளிதன்று. உலகத்தின் உண்மையைத் தெரிந்துகொண்டு, எல்லாம் இறைவன் அரு ளாணேயால் நிகழ்வன என்பதையும் அறிந்து, உயிருக்கு இன்னதுதான் இன்பம் என்ற உணர்வு தோன்றினல் அந்த வாழ்க்கை எளிதாகும். அதற்கு முதலில் இறைவ. னிடத்தில் அன்பு உண்டாக வேண்டும். பற்றற்ற இறை வனேப் பற்றுகின்ற அன்பு முறுக முறுக, அறியாமையில்ை பற்றிய மற்றப் பற்றுகள் தாமே நீங்கும். -

இறைவனிடம் அன்பு செய்வது என்பது மன மொழி மெய்களால் அவளுேடு தொடர்புடைய செயல்களைச் செய் வதேயாகும். கமக்கு நம்முடைய உடம்பிலே மிகவும் திண்ணமான பற்று இருக்கிறது. அதனல் கம்முடைய எண்ணம், பேச்சு, செயல் எல்லாம் இந்த உடம்பை வளர்க் கும் நெறியிலே அமைகின்றன. இது மாறி உயிரை வளர்த்து அதற்கு இன்பம் உண்டாகும்படியான ஆர்வம் எழும்போது, உயிருக்குயிராகிய பசிபதியினிடம் அன்பு உண்டாகும். அவனைப் பற்றியே சிந்திப்போம்; அவனைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/65&oldid=548486" இலிருந்து மீள்விக்கப்பட்டது