பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 ஒன்றே ஒன்று

பற்றியே பேசுவோம்; அவைேடு தொடர்புடைய செயல் களேயே செய்வோம்.

இதற்கு நீண்ட நாள் பழக்கம் வேண்டும். ஆயிரம் ஆண்டு, ஈராயிரம் ஆண்டு என்று பழக்கம் செய்ய நமக்கு இயலாது. காம் பெற்றிருப்பது சில வாழ் நாட்களே. நெடுநாள் பழகிளுல்தான் வரும் என்று உணர்ந்து கொண் டால் அந்த நல்ல பழக்கத்தில் ஈடுபட உடனே முந்தவேண் டும் அல்லவா? இருக்கிற காளோ மிகக் குறைவு. அவற் றில் ஒரு நாளேயாவது வீளுக்கலாமா?

இறைவனுடைய திருநாமத்தைச் சொல்வது அருளா தாரம் பெறும் முயற்சி வகைகளில் ஒன்று. அதல்ை நமக்கு நன்மை உண்டு. இறக்கும்போது அதைப் புதியதாகக் கற்றுக்கொண்டு சொல்லமுடியாது. முன்பே பழக வேண் டும். எவ்வளவுக்கு எவ்வளவு முன்பாகவே பழகுகிருேமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது. இந்தப் பிறவிக்கு முன்பு நாம் சொன்னேமோ, இல்லையோ கமக்குத் தெரியாது. நாம் பிரத்தியட்சமாகக் காண்பது இப்போது நிகழும் வாழ்க்கை யைத்தான். ஆகவே இந்த வாழ்க்கை தொடங்கும்போதே அந்தப் பழக்கம் உண்டானல் மிக மிக நல்லது. பிறந்த வுடன் இறைவனே கினேக்கவும், அவன் காமத்தைச் சொல் லவும் கம்மால் இயலாது. அறிவு வராத பருவம் அது: பேச்சு வராத குழவிப் பருவம் அது. இது இன்ன பொருள் என்று நினைக்கும் ஆற்றல் எப்போது வரு கிறதோ, அப்போதே இறைவனே கினைக்கத் தொடங்கிவிட வேண்டும். எப்போது பேசவருகிறதோ அப்போதே அவன் நாமத்தைச் சொல்லத் தொடங்கிவிட வேண்டும்.

ஒவ்வொரு நிமிஷ் உழைப்புக்கும் பத்து குபாயென்று சொல்லி ஒரு முதலாளி வேலை வாங்குகிருன். இரவும் பக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/66&oldid=548487" இலிருந்து மீள்விக்கப்பட்டது