பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரை சேர்ந்த கலம் 57

லும் வேலை நடைபெறுகிறது. தொழிலாளி பத்து மணிக்கா போவான்? உடம்பு நலிவிருந்தால்கூட எவ்வளவு விரைவில் எழுந்து செல்லலாமோ, அவ்வளவு விரைவில் எழுந்து செல்வான்; தன் சக்தி எந்த மட்டிலும் இடம் கொடுக் குமோ அந்த மட்டிலும் அவன் வேலை செய்வான். எல் லாம் பொருளுக்காக, அருளேச் சேமிக்கும் அன்பனும் அப் படித்தான் இருப்பான். பேசத் தொடங்கும்போதே இறைவன் காமத்தைப் பேசுவான். -

பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல் சிறந்துகின் சேவடியே சேர்ந்தேன். '

என்று காரைக்காலம்மையார் சொல்கிரு.ர்.

'அருளாதார நெறியில் திருநாமத்தைச் சொல்லும் பழக்கத்தை வார்த்தை பேசும் ஆற்றல் தோன்றும்போதே தொடங்கிக் கொள்ளுங்கள்” என்று கபிலதேவ நாயனுர் என்ற பக்தர் உபதேசம் செய்கிருர், -

உரைவந்து உறும்பதத்தே உரைமின்கள்.

(பேச்சு வங்து அமையும் பருவத்தில் (இறைவன். திருநாமங் களைச்) சொல்லுங்கள். பதம் . செவ்வி; பருவம்.)

இந்தப் பழக்கம் நமக்குப் பாதுகாப்பாக அமையும். இந்த வாழ்க்கையின் முடிவில் மரணம் நேரும்போது காலன் வருவான். அவனல் வரும் துன்பத்துக்கு மாற்ருக அருளா தாரம் வேண்டும். அதை இப்போதிருந்தே தேடிக்கொள்ள் வேண்டும். -

'அதற்குள் என்ன அவசரம்? போகப் போகப் பார்த் துக்கொள்ளலாமே!" என்று சிலர் சொல்ல்லாம். o

உலக வாழ்விலே ஈடுபட்டுவிட்டால் ஒன்றை விட்டு ஒன்று பற்றிப் பற்றி நாள் போய்க்கொண்டே இருக்கும். நமக்காகச் சிம்பாதிக்கப் புகுந்து, பின்பு நம் மனேவிக்காக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/67&oldid=548488" இலிருந்து மீள்விக்கப்பட்டது