பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரை சேர்ந்த கலம் 61

கடலில் அலே வீசிக்கொண்டிருக்கும். அந்த அலைகள் முத்துக்களைத் தள்ளிக்கொண்டு கரையில் வந்து சேருகின் றன. அந்தக் கரையில் நெடுநாள் கடற்பரப்பிலே வந்த கப்பல் வந்து சேர்கிறது. அந்தக் கப்பலிலிருந்து திண்ணிய

துதிக்கையையும் வலிய காலேயும் மலை போன்ற உருவத்தை

யும் உடைய யானே வந்து இறங்குகின்றது. இவை வந்து

சேரும் கடலின் கரையிலே பெரிய நகரமாகிய மறைக்

காடு இருக்கிறதாம். அங்கே மணியைப் போன்ற இறை

வன் எழுந்தருளி யிருக்கிருன்.

திரைவந்து உறும்கரைக் கேகலம்

வந்துறத் திண்கைவன்தாள் வரைவந்து உறும்கடல் மாமறைக்

காட்டுளம் மணியினையே:

(நல்ல முத்துக்களைத் தள்ளிக்கொண்டு அலைகள் வந்து சாரும் கரையில் கப்பல் வந்து சேர, அதிலிருந்து கிண்ணிய துதிக்கையை யும் வலிய கால்களையும் உடைய மலை போன்ற யானைகள் வந்து இறங்கும் கடலையுடைய பெரிய மறைக் காட்டிலுள்ள, அடியவர் களாகிய எங்கள் சொத்தாகிய மணி போன்ற இறைவனே-உரை மின்கள்.

இடறுதல் - தள்ளுதல். கிரை - அலே. கலம் - கப்பல். வ்ரை - மலே. வரை யென்றது முன் உள்ள அடைகளால் யானையைக் குறித்தது. எம் மணியினை உரைமின்கள் என்று கூட்டவேண்டும்.)

அலைகள் முத்துக்களேக் க்ொணர்ந்து சேர்க்க, கப்பல் கள் யானைகளைக் கொணர்ந்து சேர்க்க, அந்த நகரம் எவ் வளவு பொருள் வளம் உடையதாக இருக்கவேண்டும்! அதோடு அங்கே அருள் வளமும் உண்டு. அதை வழங்கும் மணி அங்கே இருக்கிறதல்லவா? .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/71&oldid=548492" இலிருந்து மீள்விக்கப்பட்டது