பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6% ஒன்றே ஒன்று.

கரையில் வந்து அடையும் கப்புலே இங்கே கினைத்தது முன்னே சொன்ன செய்திக்குப் பொருத்தமாக இருக்கிறது. இந்தப் பிறவியாகிய பெரிய கடலில் உடம்பாகிய கப்பல் பயணம் செய்கிறது. இதனுள் யான போன்ற உயிர் இருக்கிறது. கப்பலுக்கு யாதோர் இடையூறு மின்றிக் கரை சேர்ந்தால் யானை அங்கே இறங்கி இன்பத்தை அடையும். கப்பல் கரையைச் சேர அதிலுள்ள யானே பாதுகாப்பாக இறங்கும் இடம் மறைக்காடு. உடம்பாகிய கப்பல், வாழ்க்கைப் பிரயாணத்தை இடையூறின்றி முடித் துக்கொண்டு இறைவனுடைய இன்ப கிலேயமாகிய முத்திக் கரைசேர்வதற்கும் இந்த மறைக்காடு இடமாக இருக்கிறது.

இந்தக் குறிப்பை உட்கொண்டே கப்பலையும் களிற் றையும் கடலையும் இங்கே கூறினர் கபிலர்.

o & - "பிறப்பெனும் பெருங்கடல் உறப்புகுந் தலைக்கும்

துயர்த்திரை உவட்டிற் பெயர்ப்பிடம் அயர்த்துக் குடும்பம் என்னும் நெடுங்கல் வீழ்த்து - கின்றயெனும் கூம்பு முரிந்து குறையா உணர்வெனும் நெடும்பாய் கீறிப் புணரும் மாயப் பெயர்ப்படு காயச் சிறைக்கலம் கலங்குபு கவிழா முன்னம்..... வம்பலர் தும்பை அம்பல. வானகின், அருள்எனும் கலத்தார். பூட்டித் -

கிருவடி நெடுங்கரை சேர்த்துமா செய்யே' என்று பட்டினத்துப் பிள்ளையார் கோயில் நான்மணி மாலை யில், பிறவியைக் கடலாகவும், உடம்பைக் கப்பலாகவும், இறைவன் அருளேக் கரை சேர்க்கும் கயிருகவும், திருவடி யைக் கரையாகவும் கூறுவது இங்கே கினைப்பதற் குரியது.

'உங்களுக்குக் காலம் போவது தெரியாது. கரை விரைவில் வந்துவிடும்; அதையடுத்துக் காலன் வருவான்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/72&oldid=548493" இலிருந்து மீள்விக்கப்பட்டது