பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரை சேர்ந்த கலம் 63

ஆதலின் அவை வருவதற்கு முன்னே, வாயிலிருந்து வார்த்தை தோன்றும் குழந்தைப் பருவத்திலேயே, மறைக் காட்டில் உள்ள இறைவனே நீங்கள் சொல்லுங்கள்’ என்று கபிலர் அறிவுறுத்துகிருர்.

உரைவந்து உறும்பதத் தேஉரை

மின்கள்; அன் ருயின், இப்பால் நரைவந்து உறும்;பின்னே வந்து உறும்

காலன்; நன் முத்து இட்றித் திரைவந்து உறும்கரைக் கேகலம்

வந்து உறத் திண்கைவன்தாள் வரைவந்து உறும்கடல் மாமறைக் காட்டுளம் மணியினையே,

(மணியினை உரைமின்கள்; அன்ருயின் நரை உறும்; பின்னே காலன் உறும் என்க.) -

மணியினை உரையாவிட்டால் வரும் துன்பங்களைச் சொன்னர். உரைத்தால் வரும் இன்பத்தை வெளிப்படை யாகச் சொல்லவில்லை. மறைக்காட்டின் பெருமையைச் சொல்வதைப் போலக் களிறு கப்பலில் வந்து கரையில் இனிதே வந்து இறங்கும் என்று கூறியதன் முல்மாக உயிர் இறைவன் அருள் பெற்று உய்யும் என்பதைக் குறிப்பாகப் பெறும்படி வைத்தார்.

இது கபில தேவ நாயனர் பாடிய சிவபெருமான் திரு இரட்டை மணிமாலையில் உள்ள 16-ஆவது பாட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/73&oldid=548494" இலிருந்து மீள்விக்கப்பட்டது