பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடைக்கு விண்ணப்பம் 73

போகும்போது அந்தப் பெண்ணும் தரிசித்துக்கொள் வளலாம்.

விடைக்குத் தயை உண்டானல் இந்தத் தெருவழியே வரலாம். இந்த விட்டுக்கு எதிரே சில கணம் கின்ருலும் நிற்கலாம்.-அதற்குமேல் அவள் மனம் போகவில்லை. உடம்பு புல்லரித்தது.

- அந்த ஆனேற்றுக்கு ஒரு விண்ணப்பம் செய்து கொள்ளலாம் என்று துணிந்தாள். அது நாலு தெருவி லும் கடப்பதுதான். எந்தத் தெருவாலுைம் அதற்கு நடை ஒன்று. ஆல்ை இந்தத் தெருவில் வந்தால் அவள் வாழ் வாள்; சிவபெருமானேக் காணவில்லையே என்று நாளுக்கு நாள் மயங்கி மாழ்கி உயிர் தேயும் அவளுக்கு அவனுடைய காட்சி புதிய உயிரை ஊட்டும். அவள் இப்போது அந்த விண்ணப்பத்தைத் தொடங்குகிருள்.

ஆன்ஏறே! போந்தால் அழிவுண்டே! அன்புடைய நானேதான் வாழ்ந்திடினும் நன்றன்றே: - (விடையே, வந்தால் உனக்கு ஏதேனும் கெடுதி உண்டோ? அன்புள்ள நானே வாழ்ந்தாலும் நன்றன்ரு உண்டே உண்டா? அன்றே அன்ற

"ஆனேறே! நீ இங்கே வந்தால் உனக்குள்ள மதிப்புக் கெட்டுப்போகுமா? உன் பொருள் ஏதாவது கெட்டுப் போகுமா? அப்படி ஒன்றும் இல்லையே! நீ வருவதனால் நான் வாழ்வு பெறுவேன். நான் வாழ்வு பெறுவது நல்லது அன்று என்று சொல்வாயா? நீ செய்கிற சிறு காரியம் ஓர் உயிரையே வாழ்விக்கிற தென்ருல் அந்தக் காரியத்தை நீ செய்ய வேண்டியவயிைற்றே!' என்று சொன்னுள்.

'இப்போது சிவபெருமான் ஓரிடத்துக்குப் போகிரு.ர். அவரை ஏற்றிக்கொண்டு செல்லவேண்டும். அவர் ஓய்வாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/83&oldid=548503" இலிருந்து மீள்விக்கப்பட்டது