பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74. ஒன்றே ஒன்று

இருக்கும்போது உன் வீதிக்கு வருகிறேன்; உன் வீட்டுக் கும் வருகிறேன்" என்று விடை கூறியது.

அவள் அதையா விரும்பினுள்? விடை அவள் வீட்டுக்கு வந்தால் என்ன, வராவிட்டால் என்ன? விடை மேலழகளுகிய இறைவன் வருவதுதானே முக்கியம்? 'c இறைவனே ஏற்றிக்கொண்டு உலா வரும்போது இந்தப் பக்கமாக வரவேண்டும்” என்று அவள் தெளிவுபடுத்து கிருள்.

இறைவனே ஏற்று கடவாவிட்டால் அந்த விடைக்கு மதிப்பு எது? உலகில் உலாவும் எருத்துமாடும் அதுவும் ஒன்ருகத்தானே போய்விடும்? இறைவனுடைய சம்பந்தத் தால் அதற்குப் பெருமை. இறைவன் இருப்பதல்ைதான் தில்லை மன்றுக்கே மதிப்பு உண்டாகின்றது. தில்லையில் வானேங்கும் பொழில்கள் வளர்ந்திருக்கின்றன. மலரும் கனியும் குலுங்கும் மாட்சியையுடைய பொழில்கள் அவை. அதல்ை தில்லைக்குப் பெருமை வரவில்லை. அங்கே உள்ள சிற்சபையாகிய மன்றில்ைதான் அதற்குப் பெருமை. அந்தச் சபைக்கும் இறைவனல் விளக்கம் உண்டாயிற்று. இறைவன் மன்றைப் பொலிவிக்கும் கோமான். அந்த மன்று தில்லையைப் பொலிவிக்கிறது. இறைவனே ஏற்று வருவத குல்தான் இடபவாகனத்துக்கும் விளக்கம் உண்டாகிறது. இவற்றையெல்லாம் கினைக்கிருள். அவற்றை அப் படியே சொல்லிவிடலாமா? குறிப்பாக வைத்து, தில்லையி லுள்ள பொன் மன்றத்துக்குப் பொலிவு உண்டாக்கும் கோமானே இத் தெரு வழியாகக் கொண்டு வா" என்று அந்த அழகி சொல்கிருள். .

. -வான்.ஒங்கு வாமாண் பொழில் தில்லை.மன்றைப் பொலிவித்த கோமான இத்தெருவே கொண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/84&oldid=548504" இலிருந்து மீள்விக்கப்பட்டது