பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருந்தேன்

உடம்பை கோயில்லாமல் பல காலம் வாழ வைக்கும் மூலிகைகளும் காயகற்பங்களும் இருக்கின்றன என்று சித்த வைத்தியம் தெரிந்தவர்கள் சொல்வார்கள். அமிர்தத்தை உண்டமையால் தேவர்கள் கோயில்லா உடம்புடையவராகித் தத்தமக்கு வரையறுத்த நாள் முழுவதும் வாழ்கிருர்கள் ஆனல் எந்த மூலிகையைச் சாப்பிட்டாலும், எந்த அமிர் தத்தை நுகர்ந்தாலும் மரணத்தை வெல்ல முடியாது. பன்னூருண்டுகள் வாழ்ந்திருந்ததாகச் சொல்லும் சித்தர் களும் உடம்பை விட்டு இறந்தே போனர்கள். பிறப்பு என்ற ஒன்று உண்டென்ருல் இறப்பும் உண்டு.

இறவாமல் பிறவாமல் இருக்கும்படி ஏதேனும் மருந்து கின்டத்தால் எப்படி இருக்கும்! இறவாமல் இருப்பது என்பது இந்த உடம்பிலே சந்ததமும் இருந்து வாழ்வது அன்று. உடம்பையே பெருமல் வாழும் வாழ்க்கை ஒன்று உண்டென்ருல், அப்போது பிறப்பு இறப்பு என்னும் இரண்டும் இல்லே யாகும். அந்த கிலேயைத்தான் முத்தி என்று சொல்வார்கள்.

பிறந்தவன் எப்போதும் இறக்க வேண்டியதுதான். மரணமில்லா வாழ்க்கை என்று பெரியோர்கள் சொல் வதெல்லாம் இந்த காற்ற உடம்பை எடுத்தவன் இதிலே சாவாமல் இருப்பதை யன்று. இந்த உடம்பு கழிந்தபின் மீட்டும் உலகிற் பிறந்து இறவாக வாழ்க்கையையே அப்படிக் குறிக்கிருர்கள். அத்தகைய வாழ்வைப் பெறி ஏதாவது மருந்து உண்டா? இருந்தால் ஒரு மண்டலமோ, இரண்டு மண்டலமோ உண்டு நன்மையண்டயலாமே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/86&oldid=548506" இலிருந்து மீள்விக்கப்பட்டது