பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௯0

ஒப்பியன் மொழி நூல்

சொல் என்னும் சொல்லினின்றே, சோழம் என்னும் நாட்டுப்பெயர் தோன்றியுள்ளதாகத் தெரிகின்றது. லகரம் ளகரமாகவும் அதன்வாயிலாய் ழகரமாகவும் திரிதல் இயல்பே.

எ - டு : கல் - கள் - காளம் - காழகம் = கருமை. கல் + து = கஃறு. கஃறெனல் = கறுத்திருத்தல்.

“கஃறென்னும் கல்லத ரத்தம்”
(தொல். எழுத்து. 40. உரை)

சுல் — சுள் — சூள் — சூழ்.
துல் — துள் — தொள் — தொழு — தோழன்.
நுல் — நுள் — நுளை — நுழை — நூழை.
புல்—பொல்—பொள்—போழ்.
கில்—கிள்—கீள்-—ழ்.
சொல்—(சோல்)—(சோளம்)—சோழம்-சோழன்.

இடங்கள் நிலைத்திணையால் (தாவரம்) பெயர்பெறுவது மிகப் பொதுவியல்பாகும்.

கா : நாவலந்தீவு, பனைநாடு, நெல்வேலி, ஆர்க்காடு, எருக்கங்குடி, தில்லை, கடம்பவனம், குறிஞ்சி, முல்லை முதலிய ஐந்திணைப் பெயர்களும் நிலைத்திணையால் வந்தவையே.

சோழன் என்னும் பெயர் வடமொழியிலும், ஆரியத் தன்மையடைந்துள்ள தெலுங்கிலும் சோட(ன்) என்று திரியும்.

கா : தமிழ் தெலுங்கு வடமொழி
தமிழம் திரவிடம் (திராவிடம்)
கிழங்கு கெட்ட
கோழி கோடி

சேரன்:

தமிழகத்தின் பெருமலைத்தொடரான குடமலை, சேர நாட்டிலிருப்பதால், சேரனுக்கு மலையன், மலையமான், மலைநாடன், வானவரம்பன் என்னும் பெயர்கள் உண்டு.

சாரல் என்னும் பெயர் மலையடிவாரத்தையும் மலைப் பக்கத்தையும் குறிக்கும். குறிஞ்சிநிலத்திற்கும் குறிஞ்சித்