பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/260

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

௧௬௨

ஒப்பியன் மொழி நூல்

கடல்கொண்டது. முற்காலத்தில் முறையே தாழ்ந்தும் உயர்ந்து மிருந்த வடதென் நிலப்பாகங்கள், பிற்காலத்தில் உயர்ந்தும் தாழ்ந்தும் போயின. இவ்விரண்டையும் இணைத்து, அகத்தியர் தாழ்ந்தும் உயர்ந்து மிருந்த வடதென் நிலப்பாகங்களைச் சமப்படுத்தினரென்றும்,வடபாகம் அமிழ்ந்ததற்குக் காரணம் நிலத்திற்குப் பாரமாகுமாறு பதினென் கணத்தவர் வந்து கூடிய சிவபெருமான் கலியாணமென்றும் கதைகட்டினர் பழைமையர்,

(6) தமிழை உண்டாக்கினது.

தமிழ் மிகப் பழைமையானதாதலாலும், பிற்காலத் தமிழர்க்குச் சரித்திரவறிவின்மையாலும், இது போது அறியப் படுகின்ற தமிழ் நூல்களுள் அகத்தியம் முன்னதாதலாலும், அகத்தியர் தலைக்கழகத்திறுதியில் வந்தவராதலாலும் அகத்தியர் தமிழை உண்டாக்கினர் என்று சிலர் கருதலாயினர். அகத்தியம் வழி நூலாதல் : அகத்தியம் தமிழிலக்கண முதனூலென்று, இதுவரையும் கூறப்பட்டுவந்தது. இற்றையாராய்ச்சியால் அது வழிநூலே யென்பது தெள்ளத்தெளியத் தெரிகின்றது: அகத்தியம் வழி நூல் என்பதற்குக் காரணங்கள்: (1) தொல்காப்பியத்தில் ஓரிடத்தும் அகத்தியம் கூறவும் சுட்டவும் படாமை. (2) என்ப' , எ உமனார் புலவர், எ மொழிய, என்றிசினோரே என்று தொல்காப்பியர் முன்னூலாசிரி யரைப் பல்லோராகக் குறித்தல், (3) 'களவினுங் கற்பினுங் கலக்க மில்லாத் தலைவனுந் தலைவியும் பிரிந்த காலைக் கையறு துயரமொடு காட்சிக் கவாவி எவ்வமொடு புணர்ந்து நனிமிகப் புலம்பப் பாடப் படுவோன் பதியொடு நாட்டொடு முள்ளுறுத் திறினே யுயர்கழி யானந்தப் பையு ளென்று பழித்தனர் புலவர் என்று அகத்தியர் முன்னோர் மொழிபொருளை எடுத் தோதுதல், சிலர் ஆனந்தக் குற்றம் பிற்காலத்துத் தோன்றிய தென்று கூறுவர். அது தவறாகும்.