பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௧௭௨

ஒப்பியன் மொழிநூல்

காட்டும் ஆரிய ஏமாற்று. அவர்க்கு முன்னமே தொடங் கினதையே உணர்த்துவதாகும், இது வேண்டாதவட சொற்கள் தொல்காப்பியத்தில் வழங்குவதனாலும் உணரப்படும். அக்காலத்தில் இரண்டொரு சொற்களே ஆரியர் தமிழிற் புகுத்தமுடியும் என்பதையும் உய்த்துணர்க .

அகத்தியர்க்குமுன் தமிழ் சற்றுத் தளர்ந்திருந்தமை

சீகத்தியர் காலத்திற்கு முன், தமிழ் நூல்கள் சிறிது போது கற்கப்பட இருந்தமை, பின்வருங் காரணங்களால் விளங்கும்.

(1) அகத்தியர் முருகனைநோக்கித் தவங்கிடக்க, அத்தெய்வம் தோன்றி, அவர்க்குச் சில ஓலைச்சுவடிகாக் காட்டிற்று என்ற கதை.

(2) அகத்தியர் தமிழை உண்டாக்கினார் என்ற வழக்கு

{3) தொல்காப்பியப் பாயிரத்தில் 'முந்து நூல் கண்டு' என்று கூறியிருத்தல்.

அகத்தியர்க்கு முன்பே, சில ஆரியர் தமிழ் நாட்டிற்கு வந்திருந்தமை முன்னர்க் கூறப்பட்டது. அவர்வயப்பட்டே பாண்டியன் தமிழைச் சிறிதுபோது வளர்க்காதிருந்திருக்க வேண்டும். கடைக்கழத்திற்குப் பின், பாண்டியரிருந்தும் கழகம் நிறுவாமையும், வணங்காமுடிமாறன் பொய்யாமொழிப் புலவர் கழகம் நிறுவச் சொன்னமைக்கு இணங்காமையும் நோக்கியுணர்க.

தொல்காப்பியர் அகத்தியர்க்குத் தெரியாத சில தொன்னூல்களைக் கண்ட மைபற்றியே, தொல்காப்பியர் என்று அவர் பெயர் பெறவும், முந்து நூல் கண்டு என்று பாயிரத்திற் குறிக்கவும் நேர்ந்ததென்க. இதை, பெரும்புலவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் காலத்தில் கழக கால்கள் அறியப்படாதிருந்ததும், அவருக்குத் தெரியாத முது நூல்களை அவர் மாணாக்கரான டாக்டர் உ. வே. சாமிநாதையரவர்கள் கண்டதுமான நிலைக்கு ஒப்பிடலாம்.

தொல்காப்பியர் அகத்தியர்க்குத் தெரியாத முந்து நூல் கண்டமைபற்றியே, தம் நாலில் அகத்தியத்தைப்பற்றி