பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கஅ௬

ஒப்பியன் மொழி நூல்

(2) வடபாகத்தில் வழங்காத பல சொற்களும் பழமொழிகளும் வழங்கல்,

(3) வடசொற்கள் தற்பவமாக வழங்கல்,

கா : சாக்ஷி-சாக்கி.

சுத்தம், மிராசுதார் முதலிய சொற்களுக்குத் துப்புரவு. பண்ணையார் முதலிய தனித்தமிழ்ச் சொற்கள் வழங்குகின்றன,

(4) சொற்கள் உண்மை வடிவில் வழங்கல்: கா : இராமம்-(நாமம்):

(5) அயல் நாட்டினின்று வந்த பொருள்கட்குத் தமிழ்ப் பெயர் வழங்கல்.

கா : bicycle- மிதிவண்டி .

(6) வடபாகத்திலில்லாத பல பயிர்கள் செய்யப்படல்:

கா:காடைக்கண்ணி, சாமை, குதிரைவாலி.

(7) ஓவிய வுணர்ச்சி சிறந்திருத்தல்,

(8) சல்லிக்கட்டு, சிலம்பம் முதலிய மறவிளையாட் டுக்கள் சிறப்பாய் வழங்கல்,

(ii) திருச்சியெல்லையிற் சொற்கள் குறைதல்: கா: பரசு (sweep) என்ற சொல் வழங்காமை:

(iii) வடார்க்காட்டு அல்லது சென்னைத் தமிழ் கொச்சை மிகல்,

(iv) சென்னைக்கு வடக்கில் மொழி பெயர்தல், 'வடவேங்கடம் என்று, வேங்கடம் தமிழ்நாட்டின் வடவெல்லையாகத் தொல்காப்பியப் பாயிரத்திற் கூறப் பட்டுள்ளது. ஆயினும். 'தமிழ் கூறும் நல்லுலகத்து" என்றதனால், அதைச் செந்தமிழ் நாட்டின் வடவெல்லை யாகக் கொள்வதே பொருத்தமாகும்.

வேங்கடம் இப்போது தெலுங்க நாட்டிற்கு உட்பட்டு விட்டது;