பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழ் நாட்டில் தென்பாகம்.... காரணங்கள் க அஎ தெலுங்கு மிகுதியும் ஆரியத்தன்மையடைந்து, ஆரியத் திற்கும் திராவிடத்திற்கும் இடைப்பட்ட நிலையிலுள்ளது. தெலுங்கில் எழுத்தொலிகள் வடமொழியிற் போல் வல் லோ சை பெறுகின்றன ; வகரம் பகரமாகவும் ழகரம் டகரமாக வும் மாறுகின் நன, வடசொற்கள் மிகத் தாராளமாய் வழங்கு கின்றன. ஒரு செய்யுள் பெரும்பாலும் வடசொற்களாயிருந் தால், மிகவுயர்ந்த தெலுங்காக மதிக்கப்படுகின்றது. தெலுங்கு வடிவாகப் பல தென் சொற்கள் மேலையாரிய மொழிகளிலும் வழங்குகின்றன. கா : தமிழ் தெலுங்கு ஆரியம் வினி பிலு(ச்)சு 1. pello E. appeal,repeal etc. அள் (காது) அடுகு L. audio E: audience, audible etc: வரை விராசு E. write, A: S. writan சால் சாலு L. satis, E: satisfy; வண்டி, பண்டி பண்டி E. bandu வெள்ளூ Ger. wenden, A, S. wendan, E. wend to go: கேள் என்னும் சொல், வினவு என்னும் பொருளில் தமிழில் வழங்குவதுபோல, அடுகு என்னும் சொல் தெலுங்கில் வழங்குகின்றதென்க, என்னும் Write சொல்லில் (வ்) பண்டு ஒலித்தது. (v) தெலுங்கிற்கு வடக்கில் ஆரியமொழி வழங்கல். பண்டைக்காலத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராட்டி, குஜராத்தி என்னும் ஐந்தையும், ஆரியரே பஞ்சத் ராவிட என்று அழைத்தனர். கால்டுவெல் ஐயர் இத்தொகுப்பை ஒப்புக் கொள்ளவில்லை. ஆயினும், இத்தொகுப்பு சரியானதே யென்பது, இம்மடலத்தின் 2ஆம் பாகத்தில் விளக்கப்படும். (vi) வட இத்தியாவில் திராவிட மறைவு. கோண்டி (Gondi), பத்ரீ { Bhatri), மால்ற்றோ (Malto). போய் (Bhoi) முதலிய திராவிட மொழிகள், மெள்ள மெள்ள