பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௨௨௬

ஒப்பியன் மொழி நூல்

ஜனமேஜயன் கதை மைசூர் நாட்டில் தோன்றியது.[1]

பண்டைக்காலத்தில், திருமாலியர்க்குத் திருவரங்கமும் சைவர்க்குத் தில்லையுமே சிறந்த திருத்தலங்களாகவிருந்தன, அதனால் அவற்றிற்குக் கோயில் என்றே பெயர்,

கங்கை நாட்டிலிருந்த பார்ப்பனர் தென்னாட்டிற்குக் குமரியாட வத்தனர்,

இராகனன் பெயர்க்க முயன்றதாகக் கூறும் கயிலை யாழ்ப்பாணத்திலுள்ளதே.

பதினெண் கணத்தாருள், பெரும்பாலார் தென்னாட்டிற்கே யுரியவர்.

சோழ மரபின் முன்னோருள் ஒருவனான சிபி அயோத்தியில் ஆண்டதாகக் கூறப்படுகின்றான். இதனால், வட நாட்டுச்குரிய திங்கள் மரபினரின் முன்னோர் தென்னாட்டாரே என்று தெரிகின்றது.

எண்டிசைத் தலைவர்

கிழக்கில் வேந்தன் (இந்திரன்);

இந்திரன் என்று பழைமை நூல் கூறுவது பலவிடத்தில் கடாரத்தரசனையே. இந்திரன் யானைக்கு வெள்ளை நிறமும் ஐராவதம் என்னும் பெயரும் கூறப்படுவதையும், கடாரத்திலுள்ள ஐராவுதி என்றும் ஆற்றுப் பாங்கரில் வெண்புகர் யானை வதிவதாகக் கூறப்படுவதையும், இலங்கையிலிருந்த அரக்கரும் அசுரரும் அடிக்கடி இந்திரனை வென்றதாகக் கூறுவதையும், கடாரம் கிழக்கிலிருப்பதையும், இந்திரன் கடலைப் பாண்டி தாட்டின் மேல் வரவிட்ட கதையையும், மேகம் கீழ் கடலில் தோன்றிக் கொண்டல் என்று பெயர் பெறுவதையும், கடாரமும் மலேயாவும் இன்றும் ஆடல்பாடல்களிற் சிறந்திருப்பதையும், தேவருலகிற்கு நாகலோகம் என்றொரு பெயரிருப்பதையும் நோக்குக.

எண்டிசைத் தலைவருள், அரசரெல்லாம் ஒருகாலத்தில் ஒரு தலைமுறையில் தத்தமக்குரிய திசையிலுள்ள நாடுகளை ஆண்டு கொண்டிருந்தவரே. கடாரத்தரசனுக்கு இந்திரன் என்று பட்டப்பெயரிருந்திருக்கலாம்.


  1. 1.Illustrated Weekly of India Oct. 33. 1938, p. 22,