பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/357

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழிலக்கணத் தோற்றம் . இவற்றுள், இயற்சொல் (Primitive word) என்பது இயல் பான சொல்; திரிசொல் (Derivative word) என்பது அவ்வியற் சொல்லினின்றும் திரிந்த அல்லது திரிக்கப்பட்ட சொல். இவற் றிற்கு இவையே பொருள் என்பதை, இப் பொருட் பொருத் தத்தினின்றும், சினி-நின்னை, மயில் மஞ்ஞை என்பவற்றை உறுப்புத் திரிந்தவையென்று நச்சினார்க்கினியர் கூறியிருப் பதினின்றும் உணர்ந்து கொள்க, இயற்சொல்லெனினும் வேர்ச்சொல்லெனினும் ஒக்கும். இது முதல்வேர், வழிவேர், சார்புவேர் என மூவகைப்படும். பளீர், பனிச்சு முதலிய சொற்களில் வேராயிருப்பது பள் என்பது. இது முதல்வேர். பன் என்பதன் திரிபு பால் என்பது. இது வழிவேர், பால் என்பது வால், வெள் என்று திரியும். இவை சார்பு வேர், சில சொற்களில் ஒவ்வோர் எழுத்தே பொருள் நிறைந் திருக்கும். அவ்வெழுத்தை விதையெழுத்தென்னலாம். பள் என்னும் சொல்லில் 'ள' விதையெழுத்தாகும் த(ன)மலள என்ற எழுத்துக்கள் ஒளிபற்றிய சொற்களில் வருதல் பெரும்பான்மை. திரிசொல்லும் முதல், வழி, சார்பு என மூன்றாம். கா : வேர் முதல் திரிவு வழித்திரிவு சார்புத்திரிவு சேணோன் அர், அரி அரம் அரவு, அராவு திசைச்சொல் என்பது, செந்தமிழ் நாட்டில் வழங்கும் பொருளினின்றும் வேறான பொருளில் வழங்கும் கொடுந் தமிழ்ச் சொல்லாகும். கா : வளர (மலையாளம்) = மிக. வடசொல் வடமொழிச் சொல். கிளவி கிளவியென்பது பெயர் முதலிய நால்வகைச் சொல்லுக் கும் பொதுப் பெயர், கிளத்தல் சொல்லுதல். ' இலக்கண நூல் தோன்றுமுன்னமே, திணை பால் எண் இடம் வேற்றுமையும், வினாவும் செப்பும் பிறவும்பற்றிய மரபு