பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/369

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழிலக்கணத் தோற்றம்

௨௭௧

இருள் அகவிருள் புறவிருள் என இரண்டாதலின், இரண்டாம் எண் இருமையெனப்பட்டது.

இங்ஙனம் கூறுவது பொருட்டொகை (பூதசங்கியை) முறையாகும்: ஒன்பதுவரை ஏனையெண்களும் இம்முறை பற்றியவையே.

மூன்று : மூ =முக்கு. மூக்கின் பக்கங்கள் மூன்றாயிருத்தல் காண்க, மூன்று என்னும் வடிவம் ஒன்று என்பதனுடன் எதுகை நோக்கியது.

நான்கு : நாலம் — நாலு—நாலுகு—தால்கு—நான்கு:

நாலம்—ஞாலம் (பூமி). ந—ஞ, போலி,

உலகத்திற்கு காலம் என்னும் பெயர் வந்ததின் காரணம் முன்னர்க் கூறப்பட்டது. நாலம் என்னும் உலகப் பெயர் அதன் பகுதியையும் குறிக்கும். "மைவரை யுலகம்", தமிழுலகம் என்னும் வழக்குகளை நோக்குக உலகம் இயற்கையில் நால்வகையாயிருத்தலின், நாம் என்னும் பெயர் நான்காம் எண்ணைக் குறித்தது. உலகம் நானிலம் எனப்படுவதையும் நோக்குக.

ஐந்து : கை—ஐ. ஐ+து = ஐது—ஐந்து: ஒரு கையின் விரல்கள் ஐந்து:

பொருள் விற்பனையில் கை என்னும் சொல் ஐந்து என்னும் பொருளில் இன்றும் வழங்குகின்றது.

ஆ : இதன் வரலாறு தெளிவாய்ப் புலப்படவில்லை.

ஆறு= வழி, ஒழுக்கதெமி, சமயம், மார்க்கம் என்னும் வடசொல் இப்பொருளதாதல் காண்க. ஐந்திணை வழிபாடுகளும் இன் (நாஸ்திக) மதமுஞ் சேர்ந்து ஆறாகக் கொள்ளப்பட்டிருக்கலாம். அல்லது வேறொரு வகையாய் அறுமதங்கள் எண்ணப்பட்டிருக்கலாம். அறு சமயம் என்னும் தொகை வழக்கு மிகத்தொன்மை வாய்ந்தது.

ஏழு: ஏழ் —ஏழு—எழு.

பண்ணைக்குறித்த யாழ் என்னும் சொல் ஏழ் என்பதன் திரிபு. யாழ் என்னும் நரம்புக்கருவி தோன்றுமுன்னமே, குறிஞ்சியாழ் பாலையாழ் எனப் பண்ணின் பெயராக யாழ்