பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/387

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழிலக்கணத் தோற்றம் 24 தி. கா. எ. கா. (1) செய்தான் செய்கின்றான் செய்வான் (2) செய்த(அ)வன் செய்கின்ற (அ)வன் செய்யுமவன் - செய்யுபவன்- செய்பவன், நடந்த(அ)வன் நடக்கின்ற (அ)வன் நடக்குமவன் -- தடக்குபவன்- டப்பவன். அகத்தியர் காலத்திற்கு முன்பே, வினைமுற்றுக்கள் பாலிறு பெற்றுவிட்டன, அஃறிணைப்படர்க்கை யிருபாற்கு மட்டும் செய்யும் என்னும் முற்றே இன்றும் உலக வழக்கில் வழங்குகின்றது ! ஆண்பாற்கும் பெண்பாற்கும் செய்யுளில் வழங்கும். செய்யும், செய்ம்ம என்பவை செய்யும் செய்ய என்றும் திரியும். இவற்றுள் முன்னவை பலவின்பாலுக்கும், பின்னவை பலர்பாலுக்கும் வரையறுக்கப்பட்டன. மர்ப. போலி. இனி, செய்பு+அ = செய்ப என்றுமாம். வினைமுற்றுக்கள் எச்சப் பொருளில் வழங்குவ துண்டு, கா : செய்வான் வந்தான். படிப்பான் செய்ம்மார் வந்தார். இவை முற்றெச்ச மெனப்படும். இவையே பிற்காலத்தில் வான் பான் மார் ஈற்று வினையெச்சங்களாகக் கூறப்பட்டன. "மாரைக் கிளவியும் பல்லோர் படர்க்கை காலக் கிளவியொடு முடியும் என்ப (தொல். 691) என்று தொல்காப்பியர் கூறுதல் காண்க. வான் பான் ஈற்று முற்றெச்சங்கள் பிற்காலத்தில் இருதிணை ஐம்பால் மூவிடங் கட்கும் வழங்கப்பட்டன. செய்பாக்கு என்பதை, செய்பு+ ஆக்கு (செயலை ஆக்க) என்று பிரிக்கலாம். ஆக்க- ஆக்கு (திரிபு). எச்சவினை பெயரெச்சம் : பெயரெச்சமெல்லாம் அன் சாவியை பெறாக அசுர வீற்றுப் பலவின்பாற் படர்க்கை வினைமுற்றுக்களே.