பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

முன்னுரை

நித்திரை - தூக்கம் பிரயோகம் - எடுத்தாட்சி (வழங்கல்).
நியதி - யாப்புறவு பிரயோஜனம் - பயன்
நியமி - அமர்த்து பிரஜை -குடிகள்
நியாயம் - முறை பிராகாரம் - சுற்றுமதில்
நீதி - நயன் பிராணன் - உயிர்
பக்தன் - அடியான் (தேவடியான்) பிராணி - உயிர்மெய் (உயிர்ப்பொருள்), உயிரி
பக்தி - தேவடிமை பிராயச்சித்தம் - கழுவாய்
பகிரங்கம் - வெளிப்படை பிரியம் - விருப்பம்
பசு - ஆன்(ஆவு) பிரேதம் - பிணம்
பஞ்சேந்திரியம் - ஐம்புலன் புண்ணியம் - நல்வினை (அறப்பயன்)
பத்திரம் - தாள் (இதழ்) புத்தி - மதி
பத்திரிகை - தாளிகை புத்திமதி - மதியுரை
பத்தினி - கற்புடையாள் புருஷன் - ஆடவன்
பதார்த்தம் - பண்டம்(கறி) புஷ்டி - தடிப்பு(சதைப்பிடிப்பு)
பதிவிரதை - குலமகள் (கற்புடையாள்) புஷ்பம் - பூ
பந்து - இனம் புஷ்பவதியாதல் - முதுக்குறைதல் (பூப்படைதல்)
பரம்பரை - தலைமுறை பூமி - ஞாலம், நிலம்
பரிகாசம் - நகையாடல் பூர்வீகம் - பழைமை
பரியந்தம் - வரை பூரணசந்திரன் - முழுமதி
பக்ஷி - பறவை (புள்) பூஜை - வழிபாடு
பாத்திரம் - ஏனம் (தகுதி) போதி - கற்பி, நுவல்
பார்வதி - மலைமகள் போஜனம் - சாப்பாடு
பாவம் - தீவினை போஷி - ஊட்டு
பானம் - குடிப்பு (குடிநீர்) பௌரணை - நிறைமதி
பாஷை - மொழி மத்தி - நடு
பிச்சை - ஐயம்
பிச்சைக்காரன் - இரப்போன்
மத்தியானம் - நண்பகல் (உச்சிவேளை)
பிசாசு - பேய் மயானம் - சுடுகாடு, சுடலை
பிரகாசம் - பேரொளி மரியாதை - மதிப்பு
பிரகாரம் - படி மாமிசம் - இறைச்சி
பிரசங்கம் - சொற்பொழிவு மார்க்கம் - வழி
பிரசவம் - பிள்ளைப்பேறு மிருகம் - விலங்கு
பிரசுரம் - வெளியீடு
பிரத்தியக்ஷணம் - கண்கூடு
முக்தி - விடுதலை
பிரதக்ஷணம் - வலஞ்செய்தல்
பிரயாசம் - முயற்சி
முகஸ்துதி - முகமன்
பிரயாணம் - வழிப்டோக்கு
பிராணி - வழிப்போக்கள்
மூர்க்கன் - முரடன்