பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

முன்னுரை

“ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்”

“பையச் சென்றால் வையந் தாங்கும்”

என்னும் இசை நிரம்பின செய்யுள்களோடும் ஒப்பிட்டறிக.

(2) காலப்பிரிவு

ஆங்கிலத்தில், இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் முக்காலங்களுள், ஒவ்வொன்றையும் நந்நான்காகப் பகுப்பர். தமிழுக்கும் இது ஏற்றதாதல் காண்க.

நிகழ்காலம் (Present Tense)

1. அவன் வருகிறான் - செந்நிலை (Indefinite).

2. அவன் வந்துகொண்டிருக்கிறான் - தொடர்ச்சி (Continuous).

3. அவன் வந்திருக்கிறான் - நிறைவு (Perfect).

4. அவன் வந்துகொண்டிருந்திருக்கிறான் — நிறைவுத் தொடர்ச்சி (Perfect Continuous).

இங்ஙனங் கலவைக்காலங்(Compound Tense)களை ஒரு வினையாகக் கொள்ளாவிடின், குறைவு நேர்தல் காண்க.

(3) நிகழ்கால வினையெச்சம் (Infinitive Mood)

நிகழ்கால வினையெச்சமும் பெயர்நேரி (noun-equivalent) யாய் எழுவாயாதல் கூடும்.

எ-டு: எனக்குப் பாடத்தெரியும்.

இதில், 'பாட' என்பது, பாடுதல் அல்லது பாட்டு என்று பொருள்பட்டு எழுவாயாதல் காண்க; இவ்வுண்மை ஆங்கில இலக்கணத்தினாலேயே அறியப்பட்டது.

எல்லா மொழிகட்கும் பல நெறிமுறைகள் ஒத்திருக்கின்றன. ஒவ்வொரு மொழியிலும், அவற்றுள் ஒவ்வொன்றை, அல்லது சிற்சிலவற்றைக் கண்டுபிடித்திருக்கின்றனர்; இன்னும் கண்டுபிடியாதனவும் உள. ஒரு மொழியிற் கண்டுபிடித்திருப்-