பக்கம்:ஒய்யாரி.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒய்யாரி 器羲 பற்றி அன்பாகத் தடவியபடியே குழைந்தாள்: என் ராஜாவினலே எனக்கு ஒரு உதவி ஆக வேண்டியிருக்கு, மறுக்காமல் செய்வியோ? அவன் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருக் தான். ஊங்? என்று தலையசைத்துக் கேட்டாள் அவள். சொல்லு சொன்னுல் தானே தெரியும்’ 'அவசரம் அவசியம். எனக்கு நூறு ரூபா வேனும். காளேக்கே வேணும். அவள் விழிகளால் அவனை அளந்து வார்த்தைகளைச் சிந்தினுள்: 'உன்னிடம் கேட்க வேண்டாம்னு தான் கினேச்சேன். வேறு யாரிட மும் கிடைக்குமென்று தோணலே. இந்தச் சமயத்திலே நீ தான் கொடுத்து உதவனும். சரியா? அவன் யோசனையில் சிக்கித் தவித்தான். ஊங்? சரியா? என்று அவனே அனைத்து அருகிழுத்தாள் அழகி. g ; ‘ஊம்... ‘என்ன யோசனை? என்று கேட்டு அவன் முகத் தோடு முகம் சேர்த்தாள் மோகினி. 'நூறு ரூபாயா? அவள் இரு கைகளாலும் அவன் தலையை அன்பாகப் பற்றி கிமிர்த்தி, வாசனை அலை பாப்பும் தன் முகத்தை அருகே.அருகே ... அருகே, கொஞ்சம் கொஞ்சமாகத் தாழ்த்திக் கொண்டிருந்தாள். கனலெறியும் அவள் கரு விழிகள் அவன் கண்களில் பாயத் துடிப்பது போல் பதிந்து மின்னின. அவள் முகம் மிகமிக அண்மையில் குவிந்தது, காழும் மல்ர் போலே, என் ராஜாவுக்கு நூறு ரூபா ஒரு பெரிதா' என்ருள். அவளது செவ்விய இதழ்கள் அவன் உதட்டில் பதிந்தன. உணர்ச்சி மிகுதி யால் அவனே அள்ளி அணைந்து ஆர்வ முத்தமிட்டுஆங்கில சினிமாப் படங்களில் சர்வ சாதாரணமாக நிகழும் விஷயத்தை-அற்புதமாகச் செயலாக்கி உணர்த்தினுள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒய்யாரி.pdf/37&oldid=762492" இலிருந்து மீள்விக்கப்பட்டது