பக்கம்:ஒய்யாரி.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒய்யாரி 39. காட்சி யளித்த தோற்றமே, சில மில்காரர்கள் தங்கள் ஆடைகளுக்காக விளம்பரப் போஸ்டர்களில் அச்சிட்டு அனுப்புகிருர்களே கண்கவரும் கலைச் சித்திரங்கள், அவற். றில் ஒன்றை கினேவுக்கு இழுக்கும். கருநாகம் போல் நெளிந்து குழையும் தலைப்பின்னலை அவள் கழுத்தை யணந்து வலது தோள் வழியாக முன்புறம் இழுத்து, அங்கவஸ்திரம் போல் வளையவிட்டு இடது தோள்ப் புற மாக பின்னுக்குத் தள்ளி யிருந்தது காண்பதற்கு அற்புத மாக யிருந்தது. உறுதியோடு வந்த அவனுக்கு அவளைப் பார்த்ததுமே வைாக்யம் எல்லாம் நழுவி ஓடுவதாகத் தெரிந்தது. அவள் சொக்குகிற சொகுசுப் பார்வை வெட்டி இ, ராஜாவா! இன்று ஏன் இவ்வளவு நேரம்? நீ வரமாட்டாயோ என்ன வோன் னு கினைத்தேன்’ என்ருள். ‘பாசாங்குக்காரி.கள்ளி! பசப்புத் தேவடியா!' என்று ஜபம் செய்து உள்ளத்தை கல்லாக்க முயன்முன் அவன். "ஏன் இன்னிக்கு ஒரு மாதிரி இருக்கிறே? இப்படி முழிச்சுக்கிட்டு கின்ருல் வா, வந்து உட்காரு ராஜா என்று கைவளைகள் கலகலக்க சைகை செய்தாள் அவள். அவன் அவளருகில் போய் உட்கார்ந்தான். மோகினி அவன் இடுப்பில் கை போட்டு இழுத்தனத்து தன் கன் னத்தோடு அவன் கன்னத்தைச் சேர்த்துக் கொண்டு அசைந்து ஆடினுள். ஏன் ராஜா, உனக்கு உடம்புக்கு குணமில்லையா? மேலெல்லாம் சுடுதே' என்று கேட்டாள். உடல் மட்டுமா சுடுதி உள்ளமும் கொதிக்கிறது’ என்று சாரமற்ற குரலில் சொன்னன் அவன். அவள் களுக்குச் சிரிப்பு உதிர்த்தாள். ஐயோ பாவம்' என்று செல்லமாக அவன் கன்னத்தைக் கிள்ளி ONT.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒய்யாரி.pdf/41&oldid=762497" இலிருந்து மீள்விக்கப்பட்டது