பக்கம்:ஒய்யாரி.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒய்யாரி

            1

காற்றிலே மிதந்து வரும் கானம் போல் இனிமை யாக இருந்தது. அவள் வருகை. அழகிய ஆடையின் தலைப்பு பின்னாலே பறந்தாட கண்கள் அப்படியும் இப் படியும் சுழன்றாட, காதுகளில் லோலக்குகள் அசை ந்தாட அவள் அடி எடுத்து வைத்தது பார்ப்பவர் மனதைத் திண்டாடத் தூண்டியது. எழிலுக்கு எழி லூட்டும் லேரியின் முன் கொசுவம் புரண்டு அசைந்து அவளது அழகிய பாதங்களைத் தொட்டுத் தடவித் துவண்டு, அவளது அழகு நடையால் அங்குமிங்கும் அலை பாய்ந்த வசீகரம் அவளைக் கண்டு நின்றவர்களின் உள்ளத்தில் எவ்வளவோ எண்ண அலைகளை எழுப்பின.

    தனது அழகை அவள் உணர்த்து, தன் எழில் மற்ற வர்களை என்ன பாடு படுத்துகிறது என்பதை நன்கு உணர்ந்து, ஒயிலாக நடந்து கொண்டிருந்தாள். அவளது
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒய்யாரி.pdf/5&oldid=1355099" இலிருந்து மீள்விக்கப்பட்டது