பக்கம்:ஒரு ஈயின் ஆசை.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15

ஆனால் யார்மீதும் ஐயுறுவதற்குத் தோன்றவில்லை. அரண்மனையில் வேலை செய்யும் அவனைவருமே உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அமைச்சர்கள், படைத்தலைவர்கள், அதிகாரிகள் ஆகியவர்களின் உறவினர்களே எல்லா வேலையிலும் இருந்தார்கள்.

அதனால் யார் மீது குற்றம் சொன்னாலும் அது சரியாக இருக்காது.

இதை எப்படிக் கண்டுபிடிப்பது என்று சிந்தித்துப் பார்த்தால் குழப்பமாகவே இருந்தது.

அரசன் பூவேந்தன் என்ன செய்வது என்று புரியாமல் விழித்துக் கொண்டிருந்தான்.

அப்போது முதலமைசர் அரசனிடம் வந்தார்.

"அரசே! நம் நாட்டின் எல்லையில் தங்க வயல் என்று ஓர் ஊர் இருக்கிறது. அங்கே அறிவாளன் என்று ஒரு குடியானவன் இருக்கிறான். பக்கத்து நாடுகளில் நடக்கும் பல திருட்டுக்களை அவன் கண்டு பிடித்துக் கொடுத்திருக்கிறான். அவனை அழைத்து வந்தால் நாம் இந்தத் திருடனைக் கண்டு பிடித்து விடலாம்" என்று கூறினார்.

பூவேந்தன் இரண்டு காவல் வீரர்களை அழைத்தார். தங்க வயலுக்குச் சென்று அறிவாளன் என்ற அந்தக் குடியானவனை உடனே அழைத்துக் கொண்டு வருமாறு கூறினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரு_ஈயின்_ஆசை.pdf/17&oldid=1165194" இலிருந்து மீள்விக்கப்பட்டது