இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
62
தன் கணவனை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதை எல்லோரும் கண்டார்கள்,
கடைசியில் தேவ தேவனான இறைவனுக்கு அவள் மேல் இரக்கம் பிறந்தது. அவளுடைய பொறுமையை நிலையாக்குவதற்காக அவர் அவளையும் அவள் குழந்தையையும் ஒரு சிலையாக மாற்றிவிட்டார்!
அதுமுதல் அந்த மலைப்பக்கமாக கடல்வழியே வட திசை நோக்கிச் செல்லும் படகுக்காரர்கள், அவளை ஒரு சிறு தெய்வமாகப் பாவித்து இந்தப் பழம் பாடலைப் பாடி வேண்டுதல் செய்து கொள்வது வழக்கமாகிவிட்டது.
- ஏலேலோ அயிலசா!
- ஏலேலோ அயிலசா!
- ஏங்கிநிற்கும் மலையம்மா
- ஏலேலோ அயிலசா
- ஏலேலோ அயிலசா!
- எங்கள் நலம் காப்பவளே
- ஏலேலோ அயிலசா!
- தென் திசையின் காற்றுதனைத்
- தேவதையே நீசொல்லி
- எங்கள் நலம் காப்பவளே
- உன் கணவன் போன வட
- திசைப்புறமே ஓட்டுவிக்க
- எங்கள் பாய் மரத்தினிலே
- இசைந்தடிக்கச் செய்திடுவாய்
- உன் கணவன் போன வட
- எங்கள் மன வேண்டுதலுக்கு
- இசைந்திடுவாய் மலையம்மா!
- ஏலேலோ அயிலசா!
- ஏலேலோ அயிலசா!
- எங்கள் மன வேண்டுதலுக்கு