பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/10

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

 8  |  ஒரு கவிஞனின் இதயம்


'தமிழில் எழுத வந்தவர்களைப் போன்ற திக்கற்ற நிலை உலகில் வேறு எவர்க்கும் இல்லை. ஆயினும் கூடப் பட்டினி கிடந்தும், செத்தும் எழுத்தாளன் எழுதிக் கொண்டேயிருக்கிறான். பசி, பிணி, மூப்பு, சாக்காடு என்ற எல்லாவற்றையும் பார்த்துச் சிரித்தவாறு எழுதிக் கொண்டேயிருக்கிறான்.' ஆம்...! அப்படி எழுதிய எழுத்துக்களானதால்தான் முதியவள் நான் முயன்று கொண்டேயிருக்கிறேன். நூறு வருடத்திற்கு முன் பிறந்து மூன்றாண்டே கல்வி கற்ற ஒரு கவிஞனின் நினைவுச் சின்னங்களான அவை புதைபட்டுப் போகாமல் - ஞாலத்தின் கல்வெட்டாக - ஒரு நாள் அது விழிக்கும்! மலரும் மணம் பரப்பும் என்ற நம்பிக்கையோடு வெள்ளியங்காட்டான் கவிதைகள், கவியகம், நீதிக்கதைகள், புது வெளிச்சம் என்பனவற்றைத் தொடர்ந்து ஒரு கவிஞனின் இதயம் என்ற கடிதத் தொகுப்பும் இப்போது வெளிவருகிறது. முதல் வித்தினை விதைத் துத் தழைக்க உதவிய மதிப்பிற்குரிய புவியரசு, இரணியன், தங்க முருகேசன் போன்றோரை இன்றும் நன்றியுடன் நினைவு கூர்வதோடு, எந்தவித எதிர்பார்ப்புமின்றி என் தந்தையின் உயிர் மூச்சான எழுத்துப் பணிக்கு முழு மனதுடன் உதவும் என் அன்புப் புதல்வனும், புதல்வியுமாகிய இராதா மகேந்திரன் அவர்களுக்கும். நல்ல முறையில் அச்சிட்டு வழங்கும், நந்தினி அச்சகம் வேனில் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும் மற்றும் சிறப்புறப் பணிபுரிந்த தொழிலாளத் தோழர்களுக்கும் என் அன்பு கலந்த நன்றியை உரித்தாக்குகிறேன்

                     - வெ.இரா. நளினி