பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/102

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

100 |  ஒரு கவிஞனின் இதயம்

29.12.1962

புளியம்பட்டி

வந்த காரியம் ஒருவாறு நிறைவேறிவிட்டது!

அன்புச் செல்வன்,

நீ ஆள் வசம் கொடுத்தனுப்பிய கடிதம் கிடைத்தது.

என் அருமைக்குழந்தைகளாகிய உங்களுக்கு எந்த ஒரு பொருளையும் தேடிக் கொடுக்க அசக்தனாக இருந்தேன். ஆம் சாதாரண மக்கள் கண்ணோட்டத்தில் நான் இந்த அர்த்தத்தில்தான் இன்று தென்படுகிறேன். ஆனால், நான் காலமெல்லாம் தேடியது முப்பொருள். அது உங்கள் மூவருக்கும் சொந்தம். அதைப் பராமரிக்கும் பொறுப்பு உன்னுடையது. அதை நீ என்ன வேண்டுமாயினும் செய். எப்படிச் செய்தால் நல்லது என்று தெரிகிறதோ அப்படிச் செய்.

ஆனால் ஒன்று. உன்மூலம் இந்தத் தமிழ்நாட்டாருக்கும் அது சொந்தமானது என்பதை மட்டும் மறக்க வேண்டாம்.

இனி புத்தக விசயமாக - அதில் ஏதாவது மாறுதல், சீர்திருத்தம், ஐயப்பாடு போன்றவைகளைத் தவிர்த்து என்னை எதுவும் எதிர்பார்க்க வேண்டாம்.