பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/104

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

102 |  ஒரு கவிஞனின் இதயம்

தந்தையைப் பற்றி

நான் எதைப் பற்றிப் பேசுவேன்? பொங்கிப் பெருகும் என் இதயத்திற்கு எதைக் கொண்டு அணை கட்டுவேன்?

நான் ஒரு தாய்! அத்தாய்மை உணர்ந்த பெண் இனத்தால் மட்டுமே உணரப்பட்ட அந்த ஜீவ மரணப் போராட்டத்தினோடு கூடிய வலியில் பெற்றெடுத்த அருமைக் குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலையால், உடைந்த உள்ளத்தின் மூலமாக செயலற்ற இவ்வெழுத்தின் மூலமாக நான் எதைப் பற்றிப் பேசுவேன்?

இயற்கை அன்னை நமக்கு வழங்கிய மாபெரும் செல்வங்களை நாம் தொலைத்தாயிற்று! உயிரை இயக்கும் காற்றை முடிந்த வரை அசுத்தப் படுத்தியாயிற்று! ஒழுக்கம், அன்பு, பண்பு, ஒற்றுமை போன்ற அனைத்தையும் கை கழுவிவிட்டோம். இனி வேறு என்ன? மிச்சம் மீதியாக - சாட்சியாக...

‘ஒரு பாலியல் தொழிலாளியின் சுய சரிதம் தேசத்தின் எல்லை வரை சென்று வாசகர்களின் அமோக ஆதரவைப் பெற்றதோடு, ஊடகங்கள், கணினி போன்றவற்றின் துணையோடு விற்பனையில் சக்கைப்போடு போடுகிறது’