பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/105

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

103 |  வெள்ளியங்காட்டான் 

103 வெள்ளியங்காட்டான் என்கிறது பத்திரிக்கை செய்தி. இதை விடவும் வேறென்ன வேண்டும் நமக்கு?

      ஆண்களை திருப்திப்படுத்த பாலியல் பெண்களும், பெண்களைத் திருப்திப் படுத்த பாலியல் ஆண்களும், அதைப் பற்றி எடுத்துச் சொல்ல சில சுய சரித்திரங்களும் போதுமே! இனி இந்த இந்தியத் தாய்க்கு வேறென்ன பெருமை வேண்டும்? நாட்டை உய்வித்து உயர்வடையச் செய்ய?
      நல்ல இலக்கியங்காளா? யாருக்குத் தேவை? அது எதற்கு வேண்டும்? அதன் பயன்தான் என்ன? 'கடவுளே...! நீ எங்கேயிருக்கிறாய்? உன் கண்களும், காதுகளும் உன் சாபமிடும் வாயும் செயலற்றுத்தான் போய்விட்டதா?
     யுத்தம் ஒரு நாள் நின்றுவிடும். தீவிரவாதம் ஒரு நாள் ஒழிந்து விடும். ஆனால் இந்த மானிடவர்கத்தின் மகத்தான வாழ்வு...!?
    மனித மனங்களில் இருள் சூழ்ந்துள்ளது. பொய்மையால் அவன் நிரப்பப் பட்டிருக்கிறான். அவனுக்கு விழிப்புணர்வு என்கின்ற வெளிச்சம் வேண்டும். இந்த உண்மையற்ற பொய்யான காரிருளை நீக்க, மானிடத்தின் நன்மையை நாடும். ஒவ்வொருவரும் ஒரு கைவிளக்காக வேண்டும். முடியுமா?
     வாழ்வின் உண்மைச் சுவையறியாது. சுகம் அறியாது பேரின்பம் என்ற பேற்றை அறியாது அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் என் தாய் நாடே உன் விடுதலை எப்போது? உன் கை விலங்கைக் கண்டுதான் ஒரு கவிஞன் இவ்வாறு பேசுகிறான்.
    ஒரு கவிஞனின் இதயத்தை அறிந்து கொள்ள அவனை இனம் கண்டு கொள்ள இக்கடிதங்களே போதுமானதுதான். ஆனால்...?
     அவரைப் பின் தொடர்ந்த வறுமையை, துன்பத்தை, சமுதாய ஒதுக்கலை, தனிமையை - பேதமை என்றோ அல்லது தமக்குத் தாமே விதித்துக் கொண்ட சவால் என்றோ கருதி, தம் கொள்கைகளை உறுதியோடு பின்பற்றியவர் அவர் என்பதை என்னால் கூறாமல் இருக்க முடியவில்லை.
     தோளோடு தோள் நின்று, இணைந்து வாழ்க்கை சுமைகளை பகிர்ந்து கொண்டு 35 வயதில் தம்மைப் பிரிந்து போன துணைவியின் இழப்புதான் அவரது பேரிழப்பாகும்