பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/106

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

104 |  ஒரு கவிஞனின் இதயம்

அவர் அச்சம் என்பதையே அறியாதவர் ஒரு சமயம் தம் கிராமத்தில் தலித்துகளுக்கான குடிநீர் போராட்டத்தில் மேற்குடிமக்கள். இவர் தங்களை அடித்துவிட்டதாக பொய் வழக்குத் தொடுக்க ஃபைன் கட்டி விட்டு வரும் வழியில், வழிமறித்து வழக்குத் தொடுத்தவரை இரண்டு அறை வைத்து 'இப்போது கணக்கு நேராகிவிட்டது' என்றாராம்.

பாட்டி இதை அடிக்கடி சொல்லிவிட்டு இன்னொரு விசயத்தையும் சொல்வார். உங்க அப்பாவை என்னன்னு நெனச்சே, 5 வயசுலே தப்பான ஒரு வார்த்தையை சொன்னான்னு ஒன் தாத்தா பிரம்பாலே அடிஅடின்னு அடிச்சும் உங்கப்பன் திரும்பத் திரும்ப அதையே சொன்னான். இடுப்பிலே கயித்தைக் கட்டி கெணத்துலே வுட்ட போதும் அதையே சொன்னான். தண்ணிய தொட்டுவிட்ட போதும் அந்த வார்த்தையையே சொல்ல, தோத்துப் போன தாத்தா பேசாம போயிட்டாரு. அவனுக்கே அவன் அது தப்பானதுன்னு தெரிஞ்ச பின்னாலே தா. அத அவன் வுட்டுட்டான்" என்று

ஆம்...! அவர் அப்படித்தான்...!

பெரும் போராட்டத்திற்குப்பின் அவரின் கவிதை நூலொன்று வெளிவந்தது. அவர் அதை குழந்தையைப் போல் அணைத்துக் கொண்டார். அவரது கனவு நனவாகிவிட்ட களிப்பு! எதிர்கால வறுமைக்கு சிறு விடிவு... என நம்பிய வேளையில், 'காலம்' நகைத்தது. கவிஞர்களின் கனவுகளை நம்பிக்கைகளை தகர்த்து சிதைத்து விடுவதில் காலம் எப்போதும் தோற்றுப் போய்விட்டதாகச் சரித்திரம் இல்லை. ஆம்...! அதுதான் நடந்தது. ஒரு புத்தகம்கூட விற்காத அறிமுகப்படுத்தாத நிலையில், பசி தன் வேலையை துரிதப்படுத்த பழைய பேப்பர்காரன் ஆரணாவிற்கு அவைகளை அள்ளிக்கொண்டு போக நான் கண்ணீர் விட்டேன்.

அந்த இரும்பு மனிதரோ சிரித்தார். சிரித்தவாறே “எதற்காக அம்மா நீ, அழவேண்டும்? இதில் பட்டாணியோ கடலையோ வாங்கிக் கொரிப்பவன் நம் கவிதையைப் படித்து, ஆகா..! என்ன அருமையான கவிதை எனப் பாராட்டுவான். பிறகு பாரேன்! அடுத்து வரும் நம் கவிதை தொகுதி எப்படி சக்கைப் போடு போட்டுக் கொண்டு விற்கப்போகிறதா...? இல்லையா?" என்று நானும் பார்த்தேன் சத்தான கவிதைகள் சக்கையாய் திரும்பியதை.