பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/11

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

9 |  வெள்ளியங்காட்டான் 



                   முகவுரை


கடிதங்கள் - அவைதான் எத்தனை வகை - !? மு.வ. அவர்களின் கற்பனையில் இலக்கியமாக மலர்ந்து தம்பிக்கும், தங்கைக்கும், அன்பு, பண்பு, அறிவு எனக் கலந்ததூட்டிய கடிதங்கள். பாரதியும் பாரதிக்காக பலரும் பலவிதமான பாராட்டுதலோடு கூடிய பல கருத்துக்களைக் கொண்ட கடிதங்கள. இலக்கியத்தையே இலட்சியமாகக் கொண்டதால் வந்த துன்பத்தை, துயரத்தை, தன் காதல் கிழத்தியுடன், உருகி, உருகி கனிந்து பங்கிட்டுக் கொண்ட'புதுமை பித்தனின்' கடிதங்கள் என பல விதங்களில், அப்படி ஒரு கவிஞன் தன் குழந்தைகளுக்காக எழுதப்பட்ட கடிதங்கள்தான் இவை என்ற போதும் நேருவைத் தவிர இன்று வரை எவரும் இம்மாதிரியான கடிதங்களை வெளியிட்டதாக நான் அறிந்திருக்கவில்லை. கற்பனைகளற்ற தமக்கே உரித்தான துணிவுடன் தந்தை என்ற உணர்வுடன் உண்மையுடனும் கூடி எந்நிலையிலும் அச்சமற்று இயங்கவேண்டும். மனித நேயத்தோடு வாழவேண்டும் என்ற ஒரு கவிஞனுக்கே உரிய முறையில் எழுதப்பட்ட கடிதங்கள் இவை.