பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/110

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

108 |  ஒரு கவிஞனின் இதயம்

எளிய துறைகளின் சிறு வட்டங்களில், மணமொப்பி உண்மையைத் தேடிச் சென்றுவிட்டான் எனில், நம் தமிழ் சமூகம் எதிர்கொள்ளும் விதமே மிகத் தந்திரமானது.

அவன் அலட்சியப்படுத்தப்பட்டு, அவனது இருப்பே அறியப்படாது. அவனை ஒப்புக்கு ஏற்று புன்னகையுடன் குழிதோண்டிப் புதைத்து விடுகிறது. இவர்களின் கலாச்சாரக் கொலைகள் உயிர் கொலையில் திழைத்து. சர்வாதிகாரிகளைக் கூட நாணமுறச் செய்துவிடும்.

- நன்றி. சு.ரா. அவர்களின் கட்டுரையிலிருந்து

ஒரு இலக்கியவாதியின் இதயத்திலிருந்து கனன்று எழுந்த சொற்கள் இவை. இம்மாதிரியான கருத்துக்களை, மிகுந்த சினத்துடன் என் தந்தை உரையாடக் கேட்டிருக்கிறேன்.

107 பல்கலைக் கழகங்களுக்கான முகவரிகளையும், 20க்கும் மேற்பட்ட மாத, வார, தின நாளிதழ்களுக்கான முகவரியையும் சிரமத்துடன் சேமித்துக் கொடுத்தவர் 'புவியரசு' அண்ணா அவர்கள்தான். அத்தனைக்கும் என் தந்தையின் இரு நூல்களை அனுப்பிவைத்தேன். தினமணியில் நான்குவரி விமர்சனம் தவிர வேறு எந்த விமர்சனமும் எதிலும் எழுதப்படவில்லை . அது தவிர, இருநூல்களையும் சேர்த்து 500 பிரதிகளை இலக்கிய மன்றங்களில் நடைபெற்ற விழாக்களில் தமிழ் பேராசிரியர்களுக்கும், இலக்கிய வாதிகளுக்கும் அளித்துப்படித்து இரண்டுவரி எழுதுங்கள் என்று இரஞ்சினேன். ஏனெனில் நானோர் அறிவிலி.

என் நான்காண்டுக் கல்விக்கும். பழந்தமிழ் இலக்கியத்திற்கும், கவிதைக்கும் என்ன தொடர்பு இருந்துவிட முடியும்?

ஒரு பஞ்சாலைத் தொழிலாளியாகவும், குடும்பப் பெண்ணாகவும், கடமையாற்றிய எனக்கு, சு.ரா வைப்போல், இலக்கிய உலகைப் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ள இயலாது போயிற்று. சிறு குழந்தை, ஒரு மிட்டாய்க்கு ஏங்குவது போல, இரண்டு வரி எழுத்திற்காக நான் ஏங்கினேன்.ஆனால்.....?

அந்தக் கவிஞனின் கவிதைகளைப் படிக்க நேரமில்லாது அல்லது விருப்பமில்லாத போதும். அவன் வாழ்ந்த