பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/12

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

10 | ஒரு கவிஞனின் இதயம் 



எல்லா கால கட்டத்திலும் எல்லோருக்கும் பயன்படும் வகையில் அமைந்திருக்கின்றன. நெருக்கடியான நேரத்திலும் அமைதியாக சிந்தித்துச் செயல்படவும் தன்னைத் தானே சீர்தூக்கி பார்த்துக் கொள்ளவும் கூட இவை உதவிகரமாக இருக்கும்.

அரை நூற்றாண்டுக்கும் முற்பட்ட காலகட்டத்தில் எழுதியவை இக்கடிதங்கள். காலத்தால் அழியாதவை. மேலும் அவர் வறுமையின் பல தருணங்களில் உண்ண உணவே இல்லாதபோதும் வருந்தியதில்லை. அண்டை மாநிலத்திற்குச் சென்று தன் வயோதிக காலத்திலும் மண்வெட்டி கொண்டு உழைத்து வாழவும் தயங்கியதில்லை. எந்த ஒரு சந்தப்பத்திலும் தன்நிலைபற்றி நொந்து கொண்டதும் தளர்ந்து போனதும் இல்லை. ஒரு கவிஞனுக்குரிய கம்பீரத்தோடு மரணம் வரை அச்சமற்று வாழ்ந்தார் என்பதை அவாரின் இதயத்தைப் படிக்கும் நீங்களும் அறிந்து கொள்வீர்கள்.

இதைப் பற்றிய உங்கள் கருத்துக்களை எழுதினால் கவிஞனுக்குச் சாற்றும் மலர்களாக அவரின் அடுத்த கவிதை நூலில் பிரசுரிக்க முயல்வேன்.

                 என்றும் அன்புடன் 
                 வெ.இரா. நளினி