பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/13

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

11 |  வெள்ளியங்காட்டான் 


            ' ஒ...! என் மரணமே !வா...!


'ஓ...! என் மரணமே! வா...! வந்தென்னைத் தழுவிக் கொள். என் உயிர் உன் வருகையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது. வா... வா... விரைந்து வந்து இந்த சடப் பொருளான சமுதாயத்தின் வலிய பிடியிலிருந்து என்னை விடுவித்து விடு.

    ஏனெனில் நானிங்கு ஒரு தேவ தூதனாக வந்தேன். தேவ மொழியில் உரையாடினேன். என் அர்தமுள்ள அற்புதமான மொழி இவர்களுக்குப் புரியாமல் போயிற்று. என்னைப் புறக்கணித்து விட்டனர். காரணம். இவர்களைப் போல், செல்வத்தின் பால் ஆசை கொண்டு பலவீனமானவர்களைத் தோலுரித்து நான் பணம் சேர்த்துக் கொள்ளவில்லை. ஆதலால் ஓ... என் மரணமே மக்களுக்குத் தேவையற்ற நான் உனக்கும் வேண்டப்படாதவன் ஆவேனோ?
  உன் இதயத்தில் என்பால் அன்பென்னும் அமுது ததும்பி வழிந்து கொண்டிருக்கிறது. வா...! விரைந்து வந்து என்னை ஆரத் தழுவிக்கொள்.