பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/18

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

16 |  ஒரு கவிஞனின் இதயம்

 16 ஒரு கவிஞனின் இதயம் காட்டிற்குச் செல்வதும். நமது அப்பம்மாளுடைய வருத்தம் தோய்ந்த முகம் என்னுடைய மனதை மிகவும் நோகடித்துவிட்டது. அந்தக் கிழக் கண்ணிலிருந்து ஒழுகும் கண்ணிரை ஓரளவு துடைப்பது என் கடமையாகவும் இருக்கிறது. எனவே நான் வராததற்கு நீங்கள் வருந்துவதற்குப் பதிலாகச் சந்தோஷப்படுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

 எனவே உங்களுடைய வரவு இங்கு ஆவலாக எதிர்பாார்க்கப்படுகிறது.
 உங்கள் மகிழ்ச்சி எங்கள் மனச் சாந்தி. 
 உங்கள் சேமமே எங்கள் செல்வம்.
எங்கும் நலம் பெருகுக 

                        இங்ங்னம் 
                     N.k.இராமசாமி


பி.கு: அவருடைய பெரியம்மாவுக்கு மழை பொய்த்துப் போனதால், நான்கு பெண் குழந்தைகளோடு மிகச் சிரமத்திலிருந்த காலத்தில் அவர்களுக்கு உதவச் சென்றபோது