பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/20

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

18 |  ஒரு கவிஞனின் இதயம்


                        |08.04.1948
                    
                     செங்காளிபாளையம்
     
    யாருக்கும் அஞ்சமாட்டேன்
  எனது அருமைக் குழந்தாய்!
      உன் கடிதம் கிடைத்தது. அதிலிருந்து சில வார்த்தைகள் எனக்குச் மகிழ்ச்சியையும், இன்னும் சில விசனத்தையும் கொடுத்தன. சர்வசக்தி படைத்த கடவுள்முன் இறைஞ்சி நின்று இதுநாள் வரையும் எனக்காக நான் ஒன்றும் கேட்டது கிடையாது. ஆனால், கடவுள் எதைக் கொடுத்தாலும் நான் முழு மனதுடன் கையேந்தத் தயாராகவே இருக்கிறேன். 
     நீ பிறந்த அந்தக் காலத்திலிருந்து நான் பலமுறை எண்ணியதுண்டு - பலதடவை சொன்னதும் உண்டு. அரசனுடைய வயிற்றில் பிறக்க வேண்டியவளாகிய நீ ஒவ்வொரு 

நாள் மாலையும் காலை உணவுக்கு என்ன செய்வது என்னும் கவலைமிக்க என்னுடைய வயிற்றில் தவறி வந்து பிறந்துவிட்டாய்.

   உன்னுடைய அருமையை நான் 

அறிந்தேன் -அதற்க்கு இணங்க