பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/23

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

21 |  வெள்ளியங்காட்டான் 



                    14.04.1948
                   செங்காளிபாளையம்
  
  அன்புள்ள குழந்தையே,
    வாழ்க்கை அறிஞனுக்கு வயிற்று வலியாகவும், மூடனுக்கு மாம்பழமாகவும் தான் என்றும் இருந்து வருகிறது.
  நானும் பார்த்துக் கொண்டே வருகிறேன். விதி என்ற பேய்க் காற்றில் ஆடும் பட்டம் போல ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு ஆசை மேலீட்டால் ஆட்டம் போட்டுக் கொண்டுதானிருக்கிறான். இந்த அழகில் கிளி, கழுகைப் பார்த்து இதன் இறகுகள் எவ்வளவு விகாகமாயிருக்கின்றன என்று கேலி பண்ணுவதும், கழுகு கிளியைப் பார்த்து இந்த அப்பாவிப் பட்சி மனிதர் கையில் அடிக்கடி சிக்கிக் கொண்டு என்ன துன்பப்படுகிறது என்று இரக்கப்படுவதும் சகஜமாக நடக்கத்தான் செய்கிறது. இந்த உலகத்தைப் பார்த்துச் சிரிப்பதா? அழுவதா?
        இங்கு தோட்டத்தில் தீனிக்குத் திண்டாட்டமாயிருக்கிறது. ஒவ்வொரு நாள் கழிவது யுகம் கழிவது போல. ஆதலால்,