பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/31

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

29 |  வெள்ளியங்காட்டான் 



  குட்டியோ வாங்கி நல்ல முறையில் வாழும் நம்பிக்கையை நாம் அவர்களுக்கு ஏற்படுத்தலாமல்லவா? 
  இந்த என் எண்ணம் எளிதில் முடியும். ஆம்!
குழந்தையே! இன்று இந்த உலகில் ஒரு கவிஞனாக வாழ்வதைக் காட்டிலும் ஒரு பணக்காரனாவது மிகவும் சுலபம் - ஆனால் ஒரு கவிஞனாக வாழ்வதைக் காட்டிலும் உயர்ந்த வாழ்க்கை உண்மையிலேயே இல்லை என்று நான் உண்மையாகவே நம்புகிறேன்.
  'மன்னவனும் நீயோ! வளநாடும் உன்னதோ! உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன்?' என்று ஒர் அரசனை துரும்பாக எண்ணச் செய்தது கவிதையுள்ளம். 
    'வில்லேருழவர் பகை கொளினும் கொள்ளற்க சொல்லேர் உழவர் பகை' என்று எச்சரிக்கை செய்தது கவிதை உள்ளம்.
   நமது புத்தகம் அச்சாவதற்குச் சென்னை சென்றிருக்கிறது. பாம்பின் கால் பாம்பறியுமென்பதற் கிணங்கி என்னைப் போன்றவர்தான் என்னை அறிந்து கொள்ளவும் முடிந்தது. அப்படி அறிந்து கொண்டவர்கள் சும்மா இருக்காது வாய்விட்டுச் சொல்லவும் செய்தனர். அது இராமசடகோபன் காதில் விழவும் செய்தது. அந்த வேலையைத் தான் பார்த்துக் கொள்வதாக அவர் ஒப்புக் கொண்டும் விட்டார். அடுத்த ஆகஸ்டு 15 சுதந்திர மலர் வெளியானதும் நமது சுதந்திரம் பிஞ் சாகி முதிர்ந்து கனிந்து அதே இடத்திலிருந்து நம்மைத் தேடி வரும் என்று நாம் நிச்சயமாக சர்வ நிச்சயமாக நம்பலாம்.
   இறுதியாக இது ஒன்றுதான் சொல்லமுடியும் என் அருமை மகளே நீ உன் தந்தையை எண்ணி உண்மையிலேயே சந்தோஷப்படு. பெருமைப்படு. ஒரு மகத்தான காரியத்தைச் செய்திருக்கிறார் என்று எண்ணி உனது பளிங்கு போன்ற மனம் பூரிக்கக்கடவதாக மறுபடியும் ஒரு முறை உன்னை வாழ்த்துகிறேன். சர்வநலன்களும் நீ வாய்க்கப் பெறுவாயாக!
     வாழ்க காந்தீயம்
              ஜெய்ஹிந்த்
                     


                      உனது அப்பா 
                         
                      N.k.இராமசாமி