பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/33

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

31 |  வெள்ளியங்காட்டான் 



                       | 19.12.1948
                       சிங்காநல்லூர்


நாளைக்கு எங்கு செல்வேனோ தெரியவில்லை

        எனது அன்புக் குழந்தாய்,
            மேகங்கள் படிந்த வானம் நிர்மலமாவதிலோ நிர்மலவானம் மேகங்கள் சூழ்வதிலோ எதுவும் ஆச்சரியமில்லை.
          சுகமும் துக்கமும் மனித வாழ்வில் சாதாரணமே. எனினும் மற்றும் என்னைப் போன்ற ஒருவனுடைய வாழ்வில் சர்வ சாதாரணம் என்பது வெளிப்படை. நாம் எதை விரும்புகிறோமோ அதையே

செய்கிறோம். அதன் பயனையே பெறுகிறோம் - அனுபவிக்கிறோம். இந்த முறையில் சுகம் - துக்கம் என்ற சொற்கள் சந்தர்ப்பம் வாய்த்த போதன்றிச் சரியான அர்த்தம் தரத்தகாததாகின்றன.

         என் கொள்கை, என் அனுபவங்கள் என்னை அப்போதைக்கப்போது செலுத்திக் கொண்டு போவதில் நான் ஒதுங்கி எப்படியும் நிற்க முடியாது. எனக்காகவும் சரி - மற்றவர்களுக்காவும் சரி இவைகளைப் புறக்கணித்துவிட்டு உயிர்

வாழ்வதில் பயனிருப்பதாக என்னால்