பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/39

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

37 |  வெள்ளியங்காட்டான் 


                | 16.11.1949
           சந்தேகவுண்டம்பாளையம்

உற்சாகமா இரு!


    எனது ஆருயிர்க் குழந்தாய்,
         நேற்று சிங்காநல்லூரிலிருந்து கடிதம் வந்திருந்தது. பெருந்துறை ஆஸ்பத்திரியில்

கொண்டுபோய் உன் தாயாரை விட்டுவிட்டு வந்ததாகவும் அங்கு மிகவும் நன்றாகக் கவனித்துக் கொள்வார்களென்றும் உன் மாமா கடிதம் எழுதியிருந்தான். வாரத்திற்கு ஒரு முறை சென்று பார்த்து வருவதாகவும் அங்கு எந்த அசெளகர்யமும் இல்லை என்றும் எழுதியிருந்தான்.

   நானும் கூட இன்று உன் தாய்க்கு கடிதம் எழுதுகிறேன். நீயும் எழுது. உன் உடல் நிலை பற்றி நான் அறிந்து கொள்ளக்கூடாதா? நீ ஏன் கடிதம் 

எழுதவில்லை. நீ சந்தோஷமாக இருக்கிறாய்